பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள்பல கடந்து விட்டது. பலநாளாக, அதைக் கையால்

தொடுவதும் இலர். இதை, அந்த உறை சுற்றிச் சிலந்தி,

தன் வாய் நூலால் பின்னிவிட்டிருக்கும் வலை அறுபடாமல் இருப்பதுகொண்டு உணர்ந்துகொண்டார் புலவர்.

பயனளிக்கும் பொருள்களை, அவை பயன்படாக் காலத்தும் பேணிக்காக்கும். அம்மணைவாழ்வாரின் பொறுப் புணர்ச்சியை உள்ளுக்குள் வியந்தவாறே படியேறினார் புலவர். ஏற ஏறப், படி வளர்ந்துகொண்டே போயிற்று. வானத்தைத் தொட்டுவிட்டதோ என ஐயுறுமளவு உயர்ந் திருந்தது அம்மாளிகையின் மேல் மாடம். அம்மாடத்தின் நான்கு பக்கங்களிலும், வாழ்வார்க்குக் காற்று குறைபாடு நேராமை குறித்துப் பலகணிகள் பொருத்தப்பட்டிருந்தன. அம்மாடத்தில், மனைவாழ்வார் பள்ளிகொள்ளும் அறையுள் சென்று நின்றார் புலவர். வேனிற்பருவத்தில் வெப்பம் போக்கி, மேனியைக் குளிர்விக்கும் தென்றல் காற்று வந்து புகும் பலகணிகளை நோக்கினார். சிறுகாற்றும் நுழைந்து விடாதவாறு, இடைவெளி சிறிதும் இல்லாமல் பொருத்தப் பட்டிருக்கும் பலகணி கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டுத் தாழிடப்பட்டிருந்தன. கூதிர்ப்பருவத்தில் திறந்து வைக்கப் பட்டிருந்ததால், ப னி க் கா ற் று உள்புகுந்து பள்ளி கொள்வாரைக் குளிரால் நடுங்கச் செய்துவிடும் என்பது உணர்ந்து, அவற்றை எப்போதும் அடைத்து வைத்திருக்கும், மனைவாழ்வோரின் அறிவு நலம்கண்டு அளப்பிலா மகிழ்வு எய்தினார். -

மாளிகையின் மற்றொரு அ ைற யு ள் புகுந்தார். கோடையில், உண்பார்தம் நீர்வேட்கையைத் தணிப்பதோடு உடலின் அகப்புற வெப்பங்களை, அறவே இல்லாமல் ஆக்கும் பொருட்டு, அம்மனைவாழ் மக்கள், குளிர் ஊட்டப் பட்ட நீரே உண்பவர். அதற்காகத் தன்கண் உள்ள நீர்,

44