பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெப்பம் அடைந்துவிடாமல், கு எளி ர் ந் தே இருக்கச் செய்வதான், வயிறு அகன்று, வாய் குறுகியிருக்கும் மட்கலங் களில் உண்ணு நீரைமுகுந்து வைப்பர். அத்தகு உண்ணு நீர்க்கலங்கள் சிலவற்றை, அவ்வறையுள் கண்டார். ஆனால், அவையெல்லாம், பயன்கொள்வது விடுத்து, வறிதே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பனிக்கட்டியின் த ன் ைம ஊட்டப் பெற்ற தண்ணிர் கோடைக்குத் தான்் பொருந்தும். பல்பறை கொட்டுமளவு குளிர்மிகும் கூதிர்ப்பருவத்தில், அக்குளிர் நீர் உட்கொள்ள நாக்கும் இடம் தராது. உண்டால் உடலும் நலம் இழந்து நலிவுற்றுப்போகும். இத்தகு மருத்துவ அறிவு வாய்க்கப் பெற்றவர் அம்மனை வாழ் மக்கள். அதனால், கோடையில் உயிர் ஒம்பும் உயர்ந்த பொருளாக மதிக்கப்படும் அக்காலங்களை, மனையின் ஒருபால் வறிதே அடுக்கி வைத்திருக்கும் நிலையைக் கண்ணுற்றவாறே, மற்றொரு அறையினுள் நுழைந்தார்.

ஆங்கு, அம்மனையில் உள்ள இளையரும் முதியருமாகிய எல்லோரும் வட்டமாய் அமர்ந்திருக்க, அவர் நடுவே வாய் அகன்ற இத்தளம் அல்லது தடவு என்றெல்லாம் வழங்கப் பெறும் இறும்புச்சட்டி கிடக்க, அதில் செந்நிறம் காலும் நெருப்பு கணத்துக் கொண்டிருந்தது. அதைச் சுற்றிருந்த அவர்கள், அந்நெருப்பு காலும் வெப்பம், தம்மேனியெல்லாம் படர்ந்து, குளிர்போக்கி, வேண்டும் வெப்பத்தை வேண்டு மளவே ஊட்ட மனம்நிறை மகிழ்வெய்தி இருந்தனர்.

நிலைகுலையாகக் குன்றையும் நிலைகுலையச் செய்யும் கடுங்குளிர் காலம். ஆகவே, அறையின் பலகணிகளை அடைத்து விடுவதாலோ, குளிர்நீர் குடியாமையாலோ,

45