பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிரின் கொடுமையிலிருந்து காத்துக்கொள்வது இயலாது. செந்நெருப்பின் சூடுகொண்டால் அல்லது, குளிர்போகாது என்பது உணர்ந்து, கணப்பில் குளிர்காயும் அவர்கள் அறிவு நலம் கண்டு அகமகிழ்ந்தார் புலவர்.

"கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த செங்கேழ் வட்டம் சுருக்கிச் கொடுந்தறிச் சிலம்பி வான் நூல் வலந்தன. துங்க, வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென்வளி தருஉம் நேர்வாய்க் கட்டளைதிரியாது, திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக் கல்லென் துவலை து வலின் யாவரும் தொகுவாய்க் கன்னல் தண்ணிர் உண்ணார், பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆச ’’

(57-66). உரை: கைவல் கம்மியன்=தொழில்வல்ல தட்டான். கவின் பெறப் புனைந்த-அழகுபெறப் பண்ணிய, செங்கேழ் வட்டம்=சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம் சுருக்கி=உறையிடப்பட்டு. கொடுந்தறி=வளைந்த முளைக்கோலில். சிலம்பி வான்நூல் வலந்தன=சிலந்தியின் வெள்ளிய நூ லால் - சூழப்பட்ட வாய்.

தூங்க=தொங்கவிடப்பட்டிருக்க, வானுற உயர்ந்த=வானளவு உயர்ந்த, மேனிலை மருங்கின்=மேல்மாடத்தில் வேனில்=வேனிற்பருவத்தில், பள்ளி=பள்ளி கொள்வார்க்கு தென்வளி தருஉம்=தென்றல் காற்றைத் தரும்.

46