பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாதிரம் விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இரு கோல் குறி நிலை விழுக்காது குடக்கேர்பு ஒருதிறம் சாரா அனைநாள் அமையத்து நூலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து

ஒருங்குடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பு

(72–79)

உரை:

மாதிரம் = திசைகளில் விரிகதிர் பரப்பிய - விரிந்த கதிர்களைப் பரப்பிய. வியல்வாய் - அகன்ற இடத்தை உடைய

மண்டிலம் = ஞாயிற்று மண்டிலம் இருகோல் = அணித்து அணித்தாக இரண்டு இடங்களில்

நாட்டிய இரண்டுகோல்கள் இடத்தும் குறிநிலை = சாயா நிழலாய் தாரைபோக ஓடுகின்ற நிலையை, வழுக்காது = குறித்துக் கொள்ளும் தன்மை தப்பாதபடி, குடக்கு ஏர்பு - மேற்றிசைக்கண் சேரற்கு எழுந்து, ஒருதிறம் சாரா அமையத்து = 9H பக்கத்தைச் சாராப்போகாத

சித்திரைத் திங்களின் நடுவில் பத்தி நின்றயாதொரு நாளில் அரைநாள்-பதினைந்தாம் நாழிகையில் - நூலறி புலவர் = சிற்ப நூல் அறிந்த தச்சர்.

53