பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இருந்து நாடாளும், பெருங்கோட்டை ஆகவே, அப்பெருநிலைக்கு ஏற்ப உருவாக்கப்பெற்றது. அக்கோட்டையின் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வந்திருந்தவர்களுள் புலவரும் ஒருவர்.

அரசன் பெருங்கோயில் அமைக்க, சித்திரை திங்களில், ஞாயிறு நிலத்தின் நடுப்பகுதியில் நிற்கும் அந்தச் சிறு நாழிகையே ஏற்புடையது என்பதை உணர்ந்து அந்த நேரத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது, அந்த நாழிகையை, நுண்ணியதாக அறுதியிட்டு அறிவது அத்துணை எளிய செயல் அன்று. சித்திரைத் திங்கள், பத்தாம்நாள் தொடங்கி, இருபதுநாள் முடிய உள்ள நாட்களில் ஏதேனும் ஒருநாளில் தான்், ஞாயிறு நிலத்தின் நடுப்பகுதியில் வந்து நிற்பான். அது எந்த நாள்? எந்த நாழிகை என்பதைக் கணிப்பது அத்துணை எளிய செயல் அன்று. வளைதல் இல்லாத செவ்விய இரண்டு கோல்களை, நிலத்தில் அடுத்தடுத்து இருக்க, ஒவ்வொன்றும், நான்கு பக்கங்களில் எப்பக்கத்திலும் சாய்ந்து விடாவாறு செங்குத்தாக நிறுத்தி வைத்து,சித்திரைத் திங்கள் பத்தாம்நாள் தொடங்கி, இருபதாம்நாள் வரையும் அக்கோலின் அணித்தாகவே விழிப்போடு அமர்ந்து இருந்து, அக்கோலின் நிழல், கோலைக் கடந்து வீழ்ந்து விடாது, அக்கோலிலேயே அடங்கி விடுகிறதா என்பதை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும் நுணுகி நோக்கியிருந்து, என்று, எந்நாழிகையில் அவ்வாறு அடங்கி நிற்கிறதோ, அந்த நாழிகையே, ஞாயிறு நிலத்தின் நடுப்பகுதியில் நிற்கும் நாழிகையாம் என்பது அறிந்து அந்நாழிகையில், அடிக்கல் நாட்டப்பட்டது. .

52