பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அரசன் பெருங் கோயில்: அடிக்கல் காட்டு விழா

தம் மண் கா க் க வு ம், பிறர் மண் கொள்ளவும், நாடாள்வான் மேற்கொள்ளும் போரில் பங்குகொண்டு, புகழ் ஈட்டவும் பொருள் ஈட்டவும் கணவன்மார் பிரிந்து போயிருக்கத் தனித்துவிடப்பட்டிருக்கும் மாநகரத்து மகளிர், கூதிர்ப்பருவத்தின் .ெ க ச டு ைம ய ர ல், இவ்வாறெல்லாம் வருந்துகின்றனர் என்றால், வே ந் த ன், பகைநாட்டு பாசறைக்கண் பாடிகொண்டிருக்க, அரண்மனைக்கண் தனித் திருக்கும் அரசமாதேவியின் நிலையாதோ என்ற எண்ணம் எழவே, அரண்மனை நோக்கிப் புறப்பட்டார் புலவர்.

கட்டிடக்கலையின் கரைகண்ட வல்லார்களான கொத்தன், கொல்லன், தச்சன், தட்டாள் ஆகிய அனைவரும் ஒன்று கூடியிருந்து, ஒன்று கலந்துபேசி, நல்ல நாளும் நாழிகையும் பார்த்து, நால்வேறு திசைகளிலும் உள்ள தெய்வங்களை யெல்லாம் வழிபட்டு, அகழியும், மதிலும், வாயிலும், மாளிகையும், மன்றமும், மணிமாடமும், நாளோலக்கப் பேரவையும், நாற்படைக் கொட்டிலும், எங்கெங்கு எந்தெந்த அளவில் அமையவேண்டும் என்பதை அறுதியிட்டு வரைபடம் வரைந்துகொண்டு அறுதியிட்ட அந்த அளவில் சிறிதும் பிழை படாவண்ணம், கயிறு கொண்டு துண்ணியதாக அளந்து கண்டு கட்டிமுடிக்கப்பட்டது அரசன் பெருங்கோயில்.

அரண்மனை, ஒரு குறுநில மன்னன் இருந்து கோலோச்சும் சிறுமையுடையதன்று. பெரும்பெயர் மன்னர் எனப்புகழ் விளங்க நாடாளும் முடியுடை வேந்தர் மூவர் உள்ளும், அக்காலச் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னன்,

51