பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்கை யாழ் நரம்புகளுக்குச் சூடேற்ற மட்டுமே பயன் கொள்ளவேண்டிய அவலநிலைக்கு அவர் வருந்த, அவர் வருந்தும் நிலைக்குத்தாமும் வருந்தினார் புலவர்.

'ஆடல்மகளிர் பாடல் கொளப் புணர்மார்

தண்மையில் திரிந்த இன்குரல் தீந்தொடை கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் காதலர் பிரிந்தோர் புலம்பப்பெயல் கனைந்து கூதிர் நின்றன்றால் போதே -67-72.

உரை : ஆடல் மகளிர் = ஆடல் தொழிலை உடைய மகளிர். தண்மையில் திரிந்த = பனி தரும் குளிர்ச்சியால் தன் நிலை

குலைந்த, இன்குரல் தீந்தொடை - இனிய குரலை இயல்பாக எழுப்பும்

நரம் பை, பாடல் கொள - தாம்பாடும் வாய்ப்பாட்டினை, யாழ்

தன்னிடத்தே கொள்ளும்படி. புணர்மார் = நரம்பைக் கூட்டுவதற்கு. கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ - பருத்து வருகின்ற முலையின் வெப்பத்தே தடவி. கருங்கோட்டுச் சீறியாழ் - கரிய தண்டினையுடைய சிறிய

யாழை, பண்ணுமுறை நிறுப்ப - பண்நிற்க வேண்டிய முறையில்

நிறுத்த. காதலர்ப் பிரிந்தோர் புலம்ப = கணவரைப் பிரிந்த மகளிர்

வருந்தாநிற்க,

கூதிர் நின்றன்றால்= கூதிர்ப் பருவமாய் நிலைபெற்றது, போது=அக்காலம். -

50