பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்ந்தவள் அவள். அதனால், குற்றம், யாழ் வடிவில் இல்லை. அது காலம் செய்த குற்றம். காலம் கூதிர்க்காலம். அக்காலத்துக் குளிர்ச்சிக் கொடுமை, அந்த யாழையும் விட்டுவிடவில்லை. பனியால், நரம்பு ஈரம்பட்டுக் கிடக்கிறது. நரம்பு ஈரம்பட்டுவிடவே தான்், அதிலிருந்து இயல்பான இனிய ஒலி எழ மறுக்கிறது என்பதை உணர்ந்தாள். உடனே நரம்பின் குளிர்ச்சி போக்கி, அதற்கு வெப்பம் ஊட்ட எண்ணினாள்.

கணப்பு அருகே கொண்டு சென்று காட்டினால், நரம்பு இளகிப் பாழுற்றுப் போ ய் வி டு ம் எள்பதையும் அவள் அறிவாள். மேலும் நரம்பின் குளிர்ச்சி போக்கவல்ல வெப்பம், தன் மேனியிலேயே இருப்பதையும் உணர்ந்தவள் அவள்: மகளிர் மார்பகம் கோடையில் குளிர்ந்தும், கூதிர்ப் பருவத்தில் வெப்பம் உற்றும் இருக்கும். இதை உணர்ந்தவள். அதனால், யாழ் நரம்பினைத், தன் மார்பில் மேலும் கீழுமாகத்தடவிக் கொடுத்தான்். சிறிது பொழுது அது நடந்தது. பிறகு நரம்பினை மீட்டி பார்த்தாள். இயல்பான இனிய ஓசை எழுந்துவிட்டது. தன்னை மறந்து அவள் பாடினாள். புலவரும் இசை வெள்ளத்தில் ஆழ்ந்து தம்மை மறந்து விட்டார் சில நாழிகை.

மாநகர் வீதியுள் நுழைந்தது முதல், அம்மனையை விட்டு வெளியேறும்வரை, சிறுசிறு துன ற ல் க ைள த் தூவிக் கொண்டிருந்த வானம், திடுமெனக் கனமழையாகப் பெய்யத் தொடங்கிவிட்டது. அதுகேட்டு விழிப்படைந்த புலவர், காதலன் உடன் இருக்க, தம்மார்பு வெப்பத்தால், அவன் மார்புக்கு இன்பம். ஊட்டித், தாமும் இன்புற்றிருக்க வேண்டிய மகளிர், கூதிர்ப்பருவம் வந்துழி காதலர் வாராமையால், தனித்திருக்கும் நிலையில் தம்மார்பு வெப்பத்தைத்,

-4- 49