பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அரசன் பெருங் கோயில்

அரசன் பெருங் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த புலவர், அவ்விழா முடிந்ததும் போய்விடவில்லை. அரனுக்கு உள்ளே அ ைம ய வே ண் டி ய , அத்தனை மாடமாளிகைகளும் க ட் ட ப் ப ட் டு , சுற்று மதிலும் கட்டிமுடிக்கப் பட்டு அரணகத்தே நுழையும் வாயில் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு விட்டது, அது வரையும், புலவர் அவ்விடம் விட்டுச் சென்றார் அல்லர். வாயில் அமைக்கும் ப னி ைய மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

வாயில் வீட்டு வாயில் அன்று. கோட்டை வாயில்.

மதிற் சுவருக்குமேல், கோபுரம் உயர்ந்துதிற்க, இடையே, இத்தகு பெரிய வாயில் அமைந்திருந்தது, காண்பவர் எவரும் குன்றைத் துளைத்து உருவாக்கியதோ என வியந்து நிற்பர். பகை வென்று மீளும் வேழப் படைகள், தம் மீது வீற்றிருக்கும் வீரர்கள். உயர்த்திப் பி டி த் தி ரு க் கும் வெற்றிக்கொடி வானளாவ பறக்கும் வண்ணம், நுழைதற் கேற்ற உயரம் உடையதாக அமையவேண்டும் என எண்ணி அமைக்கப்படுவது மேற்கொள்ளப்பட்டது.

வாயில் பெரிய வாயில். அதற்கு ஏற்ற கதவு வேண்டாமா? வெற்றிக்கொடி பறக்கும் கோட்டைதான்்! ஆனால் அதுவும்: ஓரோவழி. பகைவரால் முற்றுகைக்கு உள்ளாக்கப்படவும் கூடும். அதை எதிர் நோக்கிப், பகைப்படையின் மோதலால், நிலைகுலைந்து போகாத் திண்மை வாய்த்ததாக இருத்தல் இன்றியமையாதது வாயிற்கதவுகளும் என உ ண ர் ந் து இருந்தனர். கோட்டை அமைப்பாளர்கள். -

55