பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டைக் கதவுகள்தான்். ஆனாலும், அவ்வளவு பெரிய கதவினை ஒரே பலகையால் செய்வது இயலாது. பலகைகள் சிலவற்றை இணைத்தே செய்ய வேண்டும், ஆனால் செய்தவனோ தச்சுக்கலையில் வித்தகன். அவன் பல பலகைகளால் ஆன து அன்று, ஒரே பலகையால் ஆனது-என எண்ணுமாறு, இணைப்பு தெரியாமல், கிட்டி யிட்டு இ ைண த் து . இருபத்தேழு நாண்மீன்களில், உத்தரம் என்னும் நாள் மீனின்பெயர் பெற்ற உத்தர மரத்தில் செருகியிருந்தான்். எவ்வளவு தான்் கிடுக்கி இணைத்திருந்தாலும் மரம் மர ந் த ன் பகைப்படை யானைகளால் தாக்குறின் முறிந்து போகவும் கூடும்.

அது நிகழா வண்ணம், இரும்பால் ஆன பட்டங்களைப் பெரிய பெரிய ஆணிகள் அடித்துப் பொறுத்தியிருந்தான்். கதவுகளை வலுவுடையவாக ஆக்கி விட்டனர். பட்டம்கட்டி ஆணி அடித்து விட்டால் மட்டும் போதுமா? மரமாயிற்றே; மழையில் நனைத்தால் நாளாவட்டத்தில் சாக்காடு பட்டு விடும் என்பதால், தண்ணீர் பட்டாலும் மரத்தைப் பாழுறச் செய்யாமை கருதி, மரத்தைச் சாதிலிங்கம் கொண்டு பூசுவதும் செய்து வைத்தனர். புறத்தே மலரும் பருவத்துப் பேரரும்பாய் இருந்து மலர்ந்த குவளை மலர் போலும் வடிவம் உடைய கைப்பிடியையும், அகத்தே தாழ்ப்பாளையும் பொறுத்தி வலுவான வாயிற்கதவுகளை மாட்டி விட்டனர்.

கதவுகளை வலுவுடையவாக ஆக்கிவிட்ட அவர்கள் உள்ளத்தில், அவற்றை வனப்புடையவாகவும் ஆக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவ்வளவே; தாமரை மலரில் திருமகள் வீற்றிருந்து தன் இருபக்கமும் தூக்கிய அவள் இருகைகளும் குவளைமலரைத் தாங்கி நிற்க, இரண்டு பக்கமும் இரண்டு யானைகள் நின்று தம் துதிக்கையால்

56