பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகந்து வந்த நீரை, அம்மலர்கள் மீது சொரிந்து வழி படுவது போலும் வனப்பு மிகு வடிவத்தைச் செதுக்கிவிட்டனர்; அவ்வாறு செதுக்கிக் கண்ட திருமகளின் தெய்வத் திரு மேனிக்கு வெண்சிறுகடுகைச் சாந்தாக அரைத்து நெய்யில் கலந்து அப்பிப் பேணி வைத்தனர்.

திருமகள் தெய்வத்திருமேனியை வ ழி ப ட் டு த் திரும்பினார் புலவர். எதிரே முற்றம் தோற்றமளித்தது. நாடாள்வான் அருள்நாடி வருவோர் சிலநேரம், அம் முற்றத்தே காத்திருக்க நேரவும் கூடும். ஆங்கு இருக்கும் அவர் இனிதே இருக்கும் வகையில் அம் முற்றமும் அழகு செய்யப் பெற்றிருந்தது. புதுமணல் பரப்பப்பட்டிருந்தது. ஒருபால் செயற்கையாக உருவாக்சிய நீர்நிலை; அதில் அன்னப்பறவைகள் தவழ்ந்து கொண்டிருந்தன. மற்றெரு பால் ஒருசிறுபூங்கா, கவரிமான் சில துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றின் தாவலைக் காணும் அன்னப் பறவைகளும், தம் சிறகுகளை விரித்துத் தாழத் தாவலாயின.

முற்றத்தின் அழகைக் கண்ணுற்ற களிப்போடு, கோட்டை அகத்தே உள்ள அரசன் பெருங்கோயிலை நோக்கி நடைபோட்டார் புலவர். செல்லும் அவரை ஓர் ஒலி கவர்ந்தது. உற்று கேட்டார். அது, குதிரைகள் புல்லை வாயில் கொண்டு குதுப்புங்கால் எழுப்பும் ஒலி. உடனே அவ்வொலி வந்த திசை நோக்கிச் சென்றார். ஆங்கு ஒரு குதிரைக் கொட்டில்; தலையாட்டம் அணிந்து அழகு செய்யப் பெற்ற குதிரைகள் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன. அவையெல்லாம் போர்ப்பயிற்சி பெற்றவை. எப்போதும் போரில் ஈடுபடுவதையே விரும்புவதல்லது வறிதே கட்டிப் போட்டிருப்பதை விரும்பாதவை. அதனால்தான்் நிலை

57