பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளாது, உணவாகப் போடப்பட்ட புல்லையும் உண்பது வெறுத்து குதப்பிக் கொண்டிருந்தன. அவற்றின் போர் வேட்கை கண்டு அவற்றைப் பாராட்டினார் புலவர்

அவற்றைப் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே, மலையருவி போலும் ஒலி கேட்கவே, ஏது இங்கு மலை என ஒருபால் அண்ணாந்து நோக்கினார். மலைபோல் உயர்ந்த மாளிகை காணப்பட்டது. மாளிகையின் மேல் மாடிக்குச் சென்றார். அது, அரண்மனை வாழ்வார், நிலாவின் அழகைக்கான விரும்பும் போதெல்லாம் வந்து கூடும் நிலா முற்றம். முற்றத்துக் கூரையின் கூடுவாய் மகரமீன் வடிவில் அமைந்திருந்தது. அதன் வழியே மழைநீர் வந்து கொட்டுவது போல், அம்மாடத்து மேனிலைத் தொட்டியினின்றும் நீர்வந்து வீழ்ந்து கொண்டிருந்தது. அந்நீர் எழுப்பும் ஒலியே தாம் கேட்ட ஒலி எ ன் ப த றி ந் த பு ல வ ர், மழையில்லாக் காலத்தும், மழைநீர் தரும் ஒலிகேட்டுமகிழும், அம்மனை வாழ்வாரின் மாண்புமிகு வாழ்வு நலம் பெருக வாழ்த்தினர்.

அவர் வாழ்த்தொலி அடங்கக்கேட்டது மற்றும் ஒரு பேரொலி. அவ்வொலி வந்த திசை நோக்கிச் சென்றார். அது ஒரு சோலை. மயிற்கூட்டம் நிறைந்து விளையாடும் சோலை. தோகைகளை விரித்து, அத்தோகைகள் அளித்த அழகால் செருக்குற்று நடமாடும் அம்மயிற் கூட்டம், மகிழ்ச்சி மிகுதியால் ஆரவாரித்துக் கொண்டிருந்தன. அந்த ஆரவார ஒலியே அவர் கேட்டது. அது கேட்ட அவர் மனக்கண்முன், பல்வேறு விலங்குகள் ஒருசேர ஒலிக்கும் ஒலியும், அருவிகள் பல எழுப்பும் ஒலியும், மயில் முதலாம் பல்வேறு பறவைகள் எழுப்பும் ஒலியும் கலந்து ஒலிக்கும் ஒரு மலையே வந்து காட்சி அளித்தது. அக்காட்சி நலத்தால் மெய்ம்மறந்து நின்று விட்டார் புலவர் சில நாழிகை.

58