பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பரு இரும்பு பிணித்துச் செவ்வரக்கு உரீஇத்

துணைமாண் கதவம் பொருத்தி, இணைமாண்டு நாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்துப் போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத் தாளொடு குயின்ற போரமை புணர்ப்பிற் கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து ஐயவி அப்பிய நெய்யணி நெடு நிலை வென்று எழு கொடியொடு வேழம் சென்று புகக் குன்றுகுயின்றன்ன ஓங்கு நிலை வாயில் திருநிலை பெற்ற தீது தீர் சிறப்பின், தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமொடு உகளும் முன் கடைப் பணைநிலை முளைஇய பல்லுளைப் புரவி புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக் கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறையக் கலித்துவீழ் அருவிப் பாடுவிறந்து அயல ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல் கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை நளிமலைச் சிலம்பில் சிலம்பும் கோயில்’’

–(80–100)

உரை: பரு @ಅಲಿ பிணித்து = ஆணிகளும், பட்டங்களுமாகிய பெரிய

இரும்பாலே கட்டி, செவ்வரக்கு உரீஇ=சாதிலிங்கம் வழித்து தாளொடு குயின்ற=தாழ்ப்பாளோடு சேரப் பண்ணின துணை மாண் கதவம் பொருத்திக= இரண்டாய் மாட்சிமைப் பட்ட கதவுகளைச் சேர்த்து,

59