பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை=நீண்ட மயிரினை உடைய கவரிமான்களில் துயநிறம் வாய்ந்த ஆண் கவரிமான்கள். குறுங்கால் அன்னமொடு=குறுகிய கால்களை உடைய அன்னப்பறவைகளோடு தாவித்திரியும், முன் கடை=வாசல் முன் இடத்தையும். பணைநிலை முனை இய=பந்தியிலே நிற்றலை வெறுத்த. பல் உளைப் புரவி=பற்பல தலையாட்டங்களை உடைய

குதிரைகள். புல் உணாத் தெவிட்டும்=புல்லாகிய உணவைக் குதப்பும். புலம்பு விடு குரலொடு=தனிமையை வெளிப்படுத்தும்

குரலொடு நிலவும் பயன் கொள்ளும்= அ ர ண் ம ைன வாழ்வார் நிலவொளியின் பயன் கொள்ளும். நெடு வெண் முற்றத்து=நெடிய வெள்ளிய நிலா முற்றத்தில்

$!... of 6 of , . சிம்புரி ப கு வாய்=மகரமீன் வடிவில் உள்ள பருத்த

வாயினைக்கொண்ட. அம்பணம் நிறை= கூடல் வாய் நிறைய. கலிந்து வீழ் அருவி=கலங்கி விழுகின்ற அருவியின் ஓசை

கலந்து. அயல்=அதற்கு அயல் இடத்தில். ஒலி நெடும் பீலி ஒல்க=தழைத்த நெடிய தோகை அசைய மெல் இயல்=மெல்லிய இயல்பினை உடைய. கலி மயில் அகவும்=செருக்குற்ற மயில்கள் ஆரவாரிக்கும் வயிர் மருள் இன்னிசை=கொம்பு என்னும் இசைக்கருவி எழுப்பும் இசையோஎன மயங்குதற் கேற்ற இனிய இசை.

61