பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நளி மலைச் சிலம்பில் சிலம்பும்=பெரிய அடர்ந்த மலையின் ஆரவாரம்போல் ஆரவாரிக்கும் அரசன் பெருங்கோயில்.

விளக்கவுரை: இரண்டு யானைகளுக்கிடையே திருமகள்

வீற்றிருத்தல், ' வரி நுதல் எழில் வேழம் பூநிர்மேல் சொரிதரப், புரி நெகிழ் தாமரை மலரங்கண் வீறுஎய்தித்திருநயந் திருந்தன்ன 'என்ற க லி த் .ெ த ைக (44:5-7) வரிகளாலும் அறிவுறுத்தப்படும்.

வாயில் முற்றத்தில், கவரியும், அன்னமும்போலும் விலங்கினங்களும், பறவை இனங்களும் உலாவரவிடுதல் வழக்கம் என்பது, ' ஏழகத் தகரும் அகினக் கவரியும், தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்....நீள்நெடுவாயில் நெடுங்கடை ’’ என்ற சிலப்பதிகார வரிகளாலும் ( 10:5-8) தெளிவாகும்.

62