பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கருவறை

அரசன் பெருங்கோயில் அமைப்பின் அருமை பெருமைகளை அறிந்து அகமகிழ்ந்த புலவர், அத்தகு பெருமை வாய்ந்த அரண்மனைக்குரியோராகிய அரசனையும் அரசமாதேவியையும் காணவிரும்பினார், கோட்டைக் காவலர் பால் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். காவலர், 'அரசன் இப்போது அ ண் ம ைன யி ல் இல்லை. நாடு காலல் மேற்கொண்டு கூதிர்ப் பாசறைக் கண் உள்ளான். பாண்டிமாதேவியார் மட்டுமே இங்கு உள்ளார்' என்றனர். அவர் வாழும் இடத்தையும் சுட்டிக்காட்டினர். அத்திசை நோக்கி நடைபோட்டார் புலவர்.

அரசமாதேவியார் வாழும் இடம். ஆங்குப் பீடும் பெருமையும் வாய்ந்த பாண்டியன் அல்லது, குற்றேவல் புரியும் ஆடவரும் அணுகுதல் இயலாது. அத்துணை க்காவல் உடையது. ஆனால் செல்பவர் புலவர் ஆயிற்றே புலமை தந்த உரிமையோடு உள்ளே நுழைந்து விட்டார். அரசமாதேவி வாழும் கருவறை, கருப்பக்கிருகம். அதாவது உள்ளறை: ஆங்குiயவன நாட்டிலிருந்து வாங்கி வந்த அழகிய வேலைப்பாட்டால் மாண்புற்ற மிகப் பெரிய பாவை விளக்கு, நெய்நிறைய வார்க்கப்பட்டு, பெரிய திரி கொளுத்தப்பட்டு எரிந்து கொண்டிருந்தது. அவ்வாறு பெரியதிரி எரிவதால், நெய்வற்றி விடாவண்ணம், ஏவல் மகளிர், அவ்வப்போது நெய்வார்த்துக் கொண்டே இருந்தனர். பாவை விளக்கு இவ்வாறு இ ைடய ற வு படா து பேரொளி வீசிக் கொண்டிருப்பதால், அகன்ற பெரிய அக்கருவறை முழுதும் பகலேபோல் காட்சிஅளித்தது.

63