பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைநின்று போரிட்டுப் புண்பெற்றுக் கிடக்கும் நாற்

படைகளின் நலம்காணப் பாசறைத் தள த் தி ற் கு '

சென்றுள்ளான் ' என்றனர். உடனே புலவரும், துரலையும் பொருட்படுத்தாது ஆங்குப்புறப்பட்டு விட்டார்.

ஆங்கு அவர் கண்டகாட்சி, பாண்டியப் பேரரசன், படைகள்பால் வைத்துள்ள பற்றின் பெருமையினைப் பறை சாற்றுவதாய் இருந்தது. காலம் இரவின் நடுயாமம். மேலும் கூதிர் காலத்துக் கார்மேகம் மூடிக்கொண்டிருந்தது : அதனால் எங்கும் இருள் பரவிக் கி ட ந் த து . அதனால் படைவீரன் ஒருவன், கையில் பாண்டில் எனும் பெரிய விளக்கை ஏந்தியவாறே சென்றுகொண்டிருந்தான்். தி கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்தாலும், வாடைக் காற்றால் அலைப்புண்டு அ த ன் தலை தெற்குப்பக்கமே சாய்ந்து கிடந்தது, என்றாலும் ஒளி தரத் தவறவில்லை. அது ஒளிகாட்ட, படைத்தலைவன் முன்னே செல்கின்றான்.

அவன் கையில், நெடிது உயர்ந்த வலிய காம்பில் செருகப் பெற்ற வேற்படை, அதன் முனையில், வேப்பமாலை கட்டப்பட்டிருந்தது, அவன் வழிகாட்டிசெல்கின்றான். மற்றொரு வீரன், அவன் கையில் நூலால் ஆண்குடை. முத்துச்சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவன், அரசனுக்கு அணித்தாகவே சென்றுகொண்டு, கூதிர் காலத்துக் குளிர்ந்த துரல், வேந்தன்மீது விழா வண்ண்ம் விழிப்போடு பிடித்துச் செல்கின்றான். -

இடது தோள்மீது இட்டு நாலமிட்ட மேலாடை, கூதிர்க் காற்றால் அலைப்புண்டு நழுவி விழ, அதைத்தன் இடது கையால் அணைத்துக் கொண்டும், வலது தோளில் வீரவாள்

-6- 81