பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பாசறையில் பேரரசன்

பாண்டிமாதேவியின் துயிர்க் கொடுமை கண்ட புலவர் அத்துயர், சேடியர் காலடி வருடுவதலோ, செவிலித்தாயரின் உறுதிமொழிகளாலோ தீராது. பாண்டியன், இப்போது மேற்கொண்டிருக்கும் ேப ா ரி ல் வெற்றியை விரைவில் பெற்றுப் பாசறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு, வந்து சேர்ந்த வழியேதிரும். அதுவே என் விருப்பம். வேந்தன்பால் நான் வைக்க இருக்கும் வேண்டுகோளும் அதுவே ஆதல் வேண்டும் என உணர்ந்தார். உடனே அவன் உறையும் கூதிர்ப்பாசறை நோக்கி விரைந்தார்.

பாசறைக்குச் செல்லும்போதே, கூதிர்காலத்து மழை சிறு தூரலாகப் பெய்துகொண்டிருந்தது. சென்ற நேரமோ நள்ளிரவு. அதனால், பாண்டியன் பாசறைக்கு உள்ளாகவே இருப்பன்; பள்ளியறையில் உறக்கம் மேற்கொண்டிருப்பன் என எண்ணிப் பாசறைக்குச் சென்று பள்ளியறைக்குள் சென்று பார்த்தார். ஆனால் வேந்தன் அங்கு இல்லை. ஆங்கு உள்ளாரை வினவினார். அவர்கள், 'பகலில் நடந்தபோரில், போர், மண்ணாசைகொண்டு, பிறர்நாடு கொள்ள, பகைநாட்டின்மீது தொடுத்த போர் அன்று, பாண்டிநாட்டைக் கவர்ந்து கொள்ள, சேரன் செம்பியன் உள்ளிட்ட எழுவர்வந்து கூடல் மாநகரை வளைத்துப் போரிட, அவரை வென்று துரத்திச் சென்று, அப்பகை நாட்டகத்ததாகிய தலையாலங்கானத்தே நடந்த, தன்நாடு காக்க மேற்கொண்டதல்லபோர். அப்போரில் வேந்தன் வெற்றி பெற்று விட்டான், எனினும், அவ்வெற்றிக்குத்

80