பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நள் என்யாமத்தும்=நள் எனும் ஓசை எழும் நடு யாமத்தும். பள்ளி கொள்ளான்=பள்ளி கொள்ளாமல் சிலரொடு திரிதரும் = படைத்தலைவர் சிலரோடு புண்பட்ட வீரர்களின் நலம் விசாரித்துக் கொண்டே சுற்றிச் சுற்றிவரும். பலரொடு முரணிய = சேரன், சோழன் உள்ளிட்ட எழுவரோடு

மாறுபட்டு போர் செய்கின்ற, பாசறைத்தொழில் = பாசறை வாழ்க்கை இன்னே முடிக=இப்போதே முடிவதாக தில்=அதுவே என் விருப்பம் (எ-று)

நெடுநல் வா ைட யி ன் பாட்டுடைத் தலைவனாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போரில் புண்பட்ட வீரர்களுக்கு முகமன் கூறி அவர் நலம் கேட்டதோடு அமையாது அவர்களுக்கும் அப்போரின் வெற்றிபாடும் பாணர் போலும் இரவலர்களுக்கும் வாரி வழங்கிய பின்னரே தலைநகர் தி ரு ம் டி ம் வழக்கம் உடையவன் என்பதை அவனையே பாட்டுடைத் தலை, வனாகக் கொண்ட மதுரைக் காஞ்சியின் பின்வரும்; வரிகளும் உறுதி செய்யும்.

"வில்லைக் கவைஇக் கணை தாங்கு மார்பின் மாதாங்கு எறுழ்த் தோள் மறவர்த் தம்மின்; கல் இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின் நல் எயில் உழந்த செல்வர்த்தம்மின்: கொல் ஏற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் விலகறங்க - எரி நிமிர்ந்தள்ன தான்ை நாப்பண்

86.