பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

நெருப்புத் தடயங்கள்

வது போல் தோன்றியது. அவரும் மற்றவர்களும் அவளைப் பார்த்த விதத்தில், ஒரு வேளை-தானே ஒரு வேளை-அவர் களைக் கடத்தியிருக்கலாமோ என்பதுபோல்கூட, தன்னையறியாமலே தன்னுள் மூழ்கினாள். நியாயத்திற்குப் பதில் கேட்டால் பழி கிடைப்பது இயற்கைதானே? இதனால்தான் நியாயக்காரர்களுக்கு, தங்கள்மேல் சுமத்தப்படும் பழிகளைத் துடைக்கவே நேரம் போதாததால், பழிகாரர்களே அநியாயமாய் நியாயம் பேசுகிறார்களோ?

சற்று நேரம்வரை நியாயக்காரியாய் நின்றவள், இப்போது பழிகாரியாய் தடுமாறினாள். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீளப்போவதுடன், எவளிடம் வாங்கிக் கட்டினாரோ, அவளுக்கே அதை வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுக்கப் போகிற திருப்தியில், சப்-இன்ஸ்பெக்டர் தலையை நிமிர்த்தினர். அவளை எக்காளமாக, இளக்காரமாகப் பார்த்தார்.

முத்துலிங்கம் அனுப்பிய சிறுவனோடு, தாமோதரன் வாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

9

ருவர் நல்லது செய்தார் என்பதை நம்பாத சமூகம், அந்த ஒருவர் கெட்டது செய்தார் என்றவுடன் நம்புமோ இல்லையோ, நம்ப விரும்பும் என்பதை, தமிழரசி கண் கூடாகப் பார்த்தாள். கூட்டம், ஒட்டு மொத்தமாக ஒரே கண்ணாகி, அவளேயே பார்ப்பது போலிருந்தது. அங்குள்ள ஒவ்வொருவரும் போலீசாராகி, தன்னை கண்களால் புலன் விசாரணை செய்வது போலிருந்தது. போலீசார் கேஸ் கிடைத்த திருப்தியோடும், கூட்டத்தினர் அவளை ஒருவித அதிருப்தியுடனும் பார்த்தபோது,