பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

87

தமிழரசி, அங்கே வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்ற தாமோதரனைப் பார்த்தாள். ஒருவேளை இந்தப் பழியை அவரும் நம்புவாரோ? பொன்மணி சம்பந்தமாக, அவரிடம் பேசியதையே ஒரு நடிப்பாக நினைப்பாரோ? அப்படியானால் என் காதல்...காதல் ...மண்ணாங்கட்டிக் காதல்...நாசமாய்ப்போற காதல். ஒரு ஏழைப் பெண்ணை, தனது தொழில் பலத்தால், போலீசை ஏவி அடித்த இந்த மனிதரோடு, என்ன காதல் வேண்டிக் கிடக்கு? இதோ... இங்கே... ஈரக்காயங்களோடு துடிக்கும் இவர்களை அனுதாபத்துடன் நோக்கக்கூட மறுக்கும் இந்த மனிதரை, ஒருத்தி காதலிப்பவளாக இருந்தால், அவள் நிச்சயம் வாழ்க்கையின் மெல்லினங்கள் தெரியாத வல்லினக்காரியாகத்தான் இருப்பாள்.

தமிழரசியின் தடுமாற்ற மவுனத்தை, 'குற்றத்திற்கு” ஒப்புதலாக நினைத்த சப்-்இஸ்பெக்டர், கண்களைக் கூர்மைப்படுத்தி, தனக்குள்ளேயே புலன் விசாரணை வார்த்தைகளை, வேலாய் செதுக்கிக் கொண்டிருந்தார். இதற்குள் அவள் தந்தை அருணாசலம், ராஜதுரையின் பிடியில் இருந்து திமிறியபடியே ‘சண்டாளி! இதுக்கா ஒன்ன பெத்து வளர்த்தேன்? ஒன்னை போலீஸ் விட்டாலும் நான் விடமாட்டேன். ஒன்னே என் கையால, வெட்டிப் புதைச்சால்தான் என் மனசு ஆறும், ஒண்ணு மட்டும் சொல்லுறேன். நல்லா கேட்டுக்க. நான் பெத்தது ஒரே ஒரு பையன்தான். இனிமேல், ஒனக்கும், எனக்கும் ஒட்டுமில்ல, உறவுமில்ல. போலீஸ் சாருங்களே! அவளை என்ன பண்ணனுமோ பண்ணிக்கங்க. எனக்கு சம்பந்த மில்லாதவள். ஏய் ராஜதுரை...வாடா...”

அருணாசலம், மகன் ராஜதுரையை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்தபோது, மகளை யாரும், எதுவும் செய்து விடக் கூடாதே என்று பயந்தவள் போல், கூட்டத்துள் நின்ற பகவதியம்மா. திடுதிப்பென்று ஓடி,