பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

நெருப்புத் தடயங்கள்


"யாரு... ராஜகிளியா? கல்யாணமான மூணு வருஷத்துல நாலு பிள்ள பெத்த நீயா சொல்லுதே? எங்கே, இன்னொரு தடவ என்கிட்ட சொல்லு... நீராத்திரில ... ஒன் புருஷனை படுத்துற பாட்டை ரேடியோ மாதிரி ஒப்பிக்கேன். ஏகேன்னானாம்!"

தமிழரசி புரிந்து கொண்டாள். பாட்டியை அங்கே நிற்கவைத்தால், பல பெண்கள் அங்கே மட்டுமல்ல, வேறு எங்கேயும் நிற்கமுடியாது. நாற்காலியை விட்டு எழுந்து அதன் சட்டத்தைப் பற்றியபடியே, "இந்த தள்ளாத வயசுல நீ ஏன் பாட்டி வந்தே? மெட்ராஸ்ல இருந்து ஊருக்கு வந்துட்டு, எப்போவாவது ஒன்னைப் பார்க்காமல் போயிருக்கேனா? சாயங்காலமாய் ஒன் வீட்டுக்கு வாரேன்" என்றாள், முத்துமாரிப்பாட்டி, ஆனந்தவாசியானாள்.

"பாத்தியளா அம்மாளுவளா. என் ராசாத்தி சொல்லுததை கேட்டியளா. நீங்க ஆயிரந்தான் குலுக்குனாலும், சிலுக்குனாலும், என் தங்கத்தோட குணம் வருமாடி? நிறம் வருமாடி? நெட்டையாய் போவாமலும், குட்டையாய் இல்லாமலும், கள்ளக்கண்ணு போடாமலும், நொள்ளக்கண்ணு இல்லாமலும், நேருக்கு நேராய் பாக்குற இந்த லட்சணம் எவளுக்குடி வரும்? ஆனாலும், தமிழரசி, என் தங்கம், நீ கொண்டய இப்படி தூக்கி வைக்கப்படாது... லேசா சரிச்சி போடணும்."

தமிழரசி உட்கார்ந்திருந்த நாற்காலியில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்த கலாவதி, கிழவி, தன் பெரியப்பா மகள் தமிழரசிக்கு-அதுவும் காலேஜ்ல-அதுவும் மெட்ராஸ் காலேஜ்ல பி. ஏ. படிக்கிற பொண்ணுவளுக்கே வாத்தியாரம்மாவாய் இருக்கிறவளோட கொண்டையை விமர்சனம் செய்தது பிடிக்கவில்லை. கோபத்துக்கும், சாந்தத்திற்கும் இடைப்பட்ட குரலில் "ஒன் வேலய பார்த்துக்கிட்டு இரேன் பாட்டி.