பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

நெருப்புத் தடயங்கள்

கேளுங்க. நான் காலேஜை முடிச்சுட்டு, ஊர்ல சுத்துறேன். டிராமா போடுறேன். நீங்க அப்போதான் காலேஜ்ல போய் சேர்ந்துட்டு, விடுமுறையில ஊருக்கு வந்திருக்கீங்க... ஒரு நாள்...’

"‘நான் ஒண்ணும் ஒங்கள அப்போ தாமுன்னு கூப்பிடல.” -

“அந்த சமாச்சாரம் அப்புறம். இப்போ சொல்றது வேற சமாச்சாரம். நான் எங்க வயலுல தமாஷாய் கமலை அடிக்கிறேன். நீங்க ஒங்க வயலுல பருத்திச் செடியோடு பசலிச் செடி மாதிரி நிற்கிறிங்க. நான் மாட்டுக்கு வச்சுருந்த சாட்டைக் கம்பை வச்சு, ஒங்களைப் பார்த்து ஆட்டுறேன். மொதல்ல லேசா, அப்புறம் பலமாய், அதுக்கப்புறம் வேகமாய். நீங்க வயல் கிணத்துல, குத்துக் காலுல சாய்ஞ்சு நிற்கிற ஒங்க அப்பாவைப் பார்த்து போறிங்க. அவருகிட்டே எதையோ பேசுறிங்க. அப்புறமாய் திரும்பி வாறிங்க. எனக்கு பயம் வந்துடுது. சாட்டைக் கம்பை தூர எறிஞ்சுட்டு கமலை அடிக்கிறேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஒங்களைப் பார்க்கேன். நீங்க கையில அகத்திக் கீரையை வச்சு, என்னைப் பார்த்து வேகமாய் ஆட்டி, பலமாய் ஆட்டி, அப்புறம் மெதுவாய்... ஏன் இப்படி முகம் மாறுது? இதை எதுக்குச் சொல்ல வந்தேனானல், ஒரு சின்ன நிகழ்ச்சியைக் கூட நான் மறக்கலன்னு காட்டுறதுக்குத்தான்.’’

அவன் சொல்வதை சுவையோடும், நிலம் நோக்கிய நாணச் சுமையோடும் கேட்டுக் கொண்டிருந்த தமிழரசி, அவனை துடிதுடிக்கப் பார்க்கிறாள்! அந்த நிகழ்ச்சி சின்ன நிகழ்ச்சியா? போலீஸ்காரருக்கு, அகநானூறும், புற நானுறாய் தெரியுமோ? இது இவருக்கு வெறும் அகத்திக் கீரை. ஆனால் எனக்கோ அகத்தை தீக்கீரையாக்கிய நிகழ்ச்சி. மன்மதன் போல் தீயில் சாம்பலாகி, மறுபிறவி எடுத்த மனவோட்டம். ஆனால் இவருக்கு சின்ன நிகழ்ச்சியாம். யூனிபாரம் போட்டுட்டால் - அதுவும் காக்கி