பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம்

31

யூனிபாரம் போட்டுட்டால் - எல்லாமே யூனிபாமாய் ஆயிடுமோ? சீ!

அவனை மீண்டும் பார்க்காமல், அங்கிருந்து ஒட வேண்டும் என்று நினைத்தவளுக்கு, கால்கள் சத்யாக்கிரகம் செய்கின்றன. வாய் காட்டிக் கொடுக்கிறது.

“அப்படின்னா ஒங்களுக்கு அது சின்ன நிகழ்ச்சியா?”

“ சின்ன நிகழ்ச்சின்னு சொன்னது சரிதான். அதாவது, நான் ஒருத்திமேல வச்சிருக்கிற அன்புக்கு அது சின்னம். தமிழம்மாவுக்கு இதுகூடத் தெரியலியா?”

தமிழரசியால், அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. அவன் முன்நோக்கி நடப்பதைப் பார்த்து, அவள் பின்னோக்கி இரண்டடி நடக்கிறாள். மஞ்சள் வெயிலில், தன் நிழலை நெருங்கப் போகும் அந்த நிழலையே பார்க்கிறாள். "தமிழு, ஒன்னத்தான் தமிழு, நீ என்னை மறக்கலியே? சொல்லு தமிழு, ஒரே ஒரு வார்த்தை" என்ற குரல் அவளுக்குக் கேட்கிறது. ஆனாலும் அவளால் பேச முடியவில்லை. வாய்க்கு, உதடுகள் கதவாகின்றன. ‘'எத்தனையோ வருஷத்தை வேஸ்ட் பண்ணுவது மாதிரி இப்பவும் நாம் வேஸ்டாயிடப்படாது. சொல்லு தமிழ். ஒரே ஒரு வார்த்தை; என் மேல் ஒனக்கு... சொல்ல மாட்டியா? அப்படின்னா என் கிட்ட ஒனக்கு ‘அது’ இல்லியா?” என்று குரல் சன்னமாகிறது.

தமிழரசி, தலையை மேலும் கீழும் ஆட்டுகிறாள். பிறகு இல்லியா என்ற அவன் சந்தேகத்தை உறுதிப் படுத்துவதுபோல் ஆமாம் என்று ஆகிவிடக் கூடாது என்று அஞ்சி, தலையை பக்கவாட்டில் ஆட்டுகிறாள். திடீரென்று அவள் தலையாட்டம் தடைபடுகிறது. உள்ளங்கை ஒன்று, அவள் மோவாயை ஏந்திக் கொள்வதுபோல் தோன்றுகிறது. கண்களை மூடிக்கொள்கிறாள். தாமரை மலர், தண்டோடு ஆகாயத்தில் தொங்குவது போன்ற காட்சி. பப்பாளிப்பழம் மேல் நோக்கித் தொங்குவது போன்ற