பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

33

முடிந்துவிட்டதால், இப்போ நடந்தது 'டச்சப்’ கனெக்க்ஷன்தான்.

இருவரும் இப்போது சரளமாக, ஒருவரை ஒருவர் செல்லமாகத் தட்டியபடி பேசிக் கொண்டிருந்தார்கள். எப்போதோ நடந்து முடிந்த மின்சாரக்கம்பி இணைப்பில், அந்த இரண்டு கலர் பல்புகளும் பிரகாசித்துப் பேசிக் கொண்டன.

அப்போது--

தாமோதரன் தங்கை பொன்மணி, தலைவிரிகோலமாக வந்து கொண்டிருந்தாள். இடுப்பிற்குள் புடவையோடு ஒளித்து வைத்திருந்த விஷப்பாட்டிலை அவ்வப்போது 'இருக்கிறதா' என்பதுபோல் கையால் தடவியபடியே, தன்னை இல்லாமல் ஆக்கப்போகிறவள்போல், அவர்களே நோக்கி ஓடிவந்தாள்.

4

த்தாண்டு காலமாக, மனதுள் பதியமானாலும், தனித்த சந்திப்பு என்ற இருவர் மட்டுமே "கிஸ்தி” கட்டக்கூடிய சொந்த இடத்தில் நடமுடியாமல், இப்போது 'மர'மாகும் நிலைக்குப் போயிருந்த காதல் செடிக்கு, தாமோதரனும், தமிழரசியும், 'முதிர்வு’ என்ற களைகளைக் கொய்து, அந்த காதல் மரத்தைச் செடியாகச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள். அவன் காக்கி ச் சட்டையை மறந்தான். அவள், பட்டி மன்றத்தைத் துறந்தாள்.

இந்தத் துறவில் பூத்த உருவத்திற்கு உருவகங்களாகி, எவ்வளவு பெரிய காலத்தை, வெல்லாமல் வெல்லப் பட்டிருக்கிறோம் என்ற உணர்வு உந்த, அவர்கள் ஒருவரை

நெ - 3