பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நெருப்புத் தடயங்கள்

நாகமாய் விரித்து, தமிழர சிக்குப் படம் காட்டினன். தமிழரசி, லேசாகத் திடுக்கிட்டவள் போல் கண்களை நிமிர்த்தி, பிறகு அவன் கையாட்டிற்குக் கட்டுப்பட்டு, வலது கையை தற்செயலாகத் தூக்குவது போல், பாதி துரரம் கொண்டு போனபோது, ஒருகை, அவள் கையைப் பிடித்துக் கீழே போட்டது. பார்த்தால், முத்துமாரிப் பாட்டி!

பல் தெரியச் சிரித்தபடி “இங்கே வச்சு வேண்டாம் தங்கம். இவளுவ கண்ணுபட்டால் ஒன் காதலு போயிடும். பாட்டி எங்கேயும் வேண்டாங்கல. இங்கதான் வேண்டாங்கிறேன்” என்று ரகசியமாய் கிசுகிசுத்தாள்.

வெளியே, வினை தீர்த்தான் பந்தியை கவனித்துக் கொண்டிருந்தான். தண்ணீர் கொடுப்பது முதல், தட்டுக்களில் வாழைப் பழ வகையருக்களைக் கொண்டு போடுவது வரை, எல்லாக் காரியங்களையும் அவனே செய்து கொண் டிருந்தான்.

உடனே ஒருவர் "ஏல! ஒனக்கு மூளை இருக்கா? இன்னக்கி நீ மாப்பிள்ளை வீட்டுக்காரன். மாப்பிள்ளை யோட சொந்த சித்தப்பா மகன். மாப்பிள்ளை பவுசுல உட்காருல" என்றார். சாப்பாட்டுச் சமாச்சாரங்களை மேற் பார்த்துக் கொண்டிருந்த தாமோதரன் அண்ணன் முத்துலிங்கம் “சரியான லூசு ப்யா. எந்தச் சமயத்துல எது பேசணுமுன்னு ஒனக்குத் தெரியாது. சொல்லிக் கொடுத் தாலும் புரியாது’ என்று செல்லமாகவும் காரமாகவும் பதிலளித்தார்.

ஒரு சில பெரியவர்கள் அவசரப்படுத்த, தாமோதரன் தந்தை தன் முன்னல், குத்து விளக்கிற்குக் கீழே வைக்கப் பட்டிருந்த தாம்பாளத் தட்டைத் தூக்கினர். தேங்காய், மஞ்சள் வகையருக்களுடன்-எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கட்டு நூறு ரூபாய் நோட்டுக்களோடு கொண்ட தாம்பாளத் தட்டை, தமிழரசியின் தந்தை அருணாசலத்