பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

49

திடம் ஒப்படைத்தார். அப்போது மணப் பெண்ணின் அறையில் இருந்து வெளிப்பட்ட பெண்கள், குலவையிட்டார்கள். தாமோதரனையே அப்போதும் பார்த்துப் பருகிய தமிழரசி, தன் தந்தையுடன், தான் வாங்கிக் கொடுத்த எட்டு முழ வேட்டியைக் கட்டி, ஜரிகை நேரியலை மார்பில் சுழற்றி, கம்பீரமாக உட்கார்ந்திருந்த சித்தப்பா மாடக்கண்ணுவை பெருமிதமாகப் பார்த்தாள். இப்படிப் பல இடங்களுக்குத் தாவிய அவள் கண்கள், வழக்கம் போல் மீண்டும் தாமோதரன் மேல் குவிந்த போது, அவன், சித்தப்பா மகன் காதைக் கடித்தான். கடிக்கப்பட்டவன், கடித்துக் கொண்டிருந்த உதடுகளை விட்டான்.

‘தமிழரசி அண்ணி, மெட்ராஸ்ல வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து மேடைபோட்டு பேசுறிங்களாம். இப்போ என்னடான்னால், நாங்க கொடுக்கிற பணத்தை ஒப்பா வாங்குறார். நீங்க பேசாம நிக்கிறீங்க. என்ன நாயம்?”

தமிழரசி விட்டுக் கொடுக்காமல் பேசினாள் : ‘சில சமயம் வரதட்சணை என்கிறது, ஒரு பெண்ணுக்கு, பிறந்த வீட்ல இருக்கிற சொத்துக்குக் கொடுக்கிற நஷ்ட ஈடாக்கும்.’’

“என்ன ஈடோ? ஒங்க அப்பா கிட்ட இருந்து இப்போ கொடுத்த ரூபாயை வட்டியும் முதலுமாய் வசூலிக்கத் தான் போறோம். இல்லியா தாமோதரன்?’’

தமிழரசி, சின்னச் சின்ன சிரிப்புகளாய் சிரித்து, தாமுவைப் பார்த்து விட்டு, தன்னையும் பார்த்து விட்டு, கூட்டத்தைப் பார்த்தாள். கூட்டத்தின் பார்வை ஒட்டு மொத்தமாய் தன்மேல் படுவதை உணர்ந்து, மணப் பெண்ணின் அறைக்குள், மணப்பெண் போல் வெட்கப்பட்டு ஓடினாள்.

விஜயாவை அவள் நெருங்கியபோது, அந்த அறைக் இருந்த இன்னொரு சின்ன அறைக்குள் இருந்து

நெ.--4