பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

நெருப்புத் தடயங்கள்

“அண்ணி... அண்ணி” என்று சத்தம் கேட்டது. தமிழரசி உள்ளே போனாள். பொன்மணி, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கேவினாள். இதுவரை பொன்மணியின் நினைவே இல்லாமல் இருந்த தமிழரசிக்கு, அப்போதுதான் ஞாபகம் வந்தது. நேற்றே தாமோதரனை, மாலையில் தனியாகச் சந்தித்தபோது, பொன்மணிக்கு நாகர் கோவில் கல்யாணம்’ பிடிக்கவில்லை என்பதைச் சொன்னாள்.

உடனே அவன் ‘ஊர் ல காதல் எதுலயும் சிக்கி இருக்காளா என்றான். அப்டில்லாம் கிடையாதுன்னு அவளே சொல்லிட்டாள்’ என்று தமிழரசி பதிலளித்ததும், தாமோதரன், ‘கல்யாணம் ஆகிற சமயத்துல, எல்லாப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒருமாதிரி பயம் வருமாம். இந்த பயத்தை பொன்மணி, கல்யாணத்துமேல ஏற்பட்ட வெறுப்பாய் நினைக்கிறாள். நீயும் அவள் கிட்ட எடுத்துச் சொல்லு. பக்குவமாய் பேசி அவளை ரெடிபண்ணு’"என்றான். "இப்போ வந்திருக்கிற பையன், அவள் சுபாவத்துக்கு ஏற்ற மாப்பிள்ளை’’ என்றான்.

தமிழரசிக்கு, அவன் சொல்வது நியாயமாகவே தெரிந்தது. கலைந்த தலையோடு, குலைந்த குரலோடு விம்மிய பொன்மணியைப் பார்க்க அவளுக்கே பரிதாபமாக இருந்தது. ஆனாலும் அவளை உரிமையோடு சாடினாள்:

“என்ன பொன்மணி! பொண்ணுப் பிறந்தால் ஒருத்தனோட வாழ்ந்துதானே ஆகணும். மாப்பிள்ளை நல்ல பையனும். நல்ல அழகளும். வேணுமுன்னுல் மாப்பிள்ளையை இங்கே வரவழைப்போம். அவனைப் பாரு. பிடிக்கலன்னா வேண்டாம். ஒருத்தனைப் பார்க்காமல் கழுத்தை நீட்டுறது தப்பு. அவனைப் பார்க்கும் முன்னுல பிடிக்கலன்னு சொல்றதும் தப்பு. ஒங்க அண்ணா சொல்றது மாதிரி கல்யாணம் கூடுற சமயத்துல ஏற்படுற படபடப்பைப் பற்றிக் கவலப்படாதே. கல்யாணம் ஆகிட்டால் சரியாயிடும்.’’