பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

நெருப்புத் தடயங்கள்

“நான் குரங்காவே இருந்துட்டுப் போறேன். ஆன இந்தக் குரங்கு கைல...இந்தப் பூமாலை எப்போ வரப்போவுதாம்? நம்மளால இனிமேல் நாகர்கோவிலுல தனியாய் இருக்க, முடியாதும்மா. கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்?’’ -

“எப்போ வேணுமுன்னாலும் வச்சுக்கலாம். ஆனல் நம்மளால மெட்ராஸ்ல இருந்து நாகர்கோவிலுக்கு வரமுடியாது.”

“ஆல் ரைட் சீதை இருக்கும் இடந்தான் ராமனுக்கு அயோத்தி. நான் மெட்ராஸ்ல ஒன்னோட குடித்தனம் செய்யத் தயார். ஆனால் எங்க டிபார்ட்மென்ட்ல என்னை டிரான்ஸ்பர் பண்ண மாட்டாங்களே."

“ஓங்க டிரான்ஸ்பரை என் பொறுப்புல ஒப்படைச்சிடுங்க. ஒங்க டைரக்டர் ஜெனரல் மிஸ்டர் ராதா கிருஷ்ணனை டி.வி.யில் இன்டர்வியூ செய்திருக்கேன். இன்னொரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் பொன்பரமகுரு, போலீஸ் கமிஷனர் ஶ்ரீபால் சார். இவங்களோட பல இலக்கியக் கூட்டத்துல பேசியிருக்கேன். என் 'ஹப்பிக்கு” டிரான்ஸ்பர் வேணுமுன்னு நான் நியாயமா கேட்கிறதை நிறைவேற்றாமலா போயிடுவாங்க.”

“அப்படின்னா ஒண்ணு செய்யேன். என் பேரு, புரமோஷன் பேனர்ல இருக்குதாம். ஒன் வாயால ஒரு வார்த்தை...”

நோ சார்,நோ. என் ஹஸ்பெண்ட் தாமோதரனுக்கு ஒரு சின்ன டிரான்ஸ்பர் கேட்கலாம். புரமோஷனைப் பற்றி மூச்சே விடமுடியாது. அப்படி இருக்கையில் ஆப்டர் ஆல் காதலன் தாமுவுக்கு எதையுமே கேட்க முடியாது! இப்போ நான் சொல்றதைக் கேளுங்கள். காலையில நமக்கு குட்டாம்பட்டியில் கல்யாணம். மறுநாள் மெட்ராஸ்ல ரிசப்ஷன். இதுக்குள்ள, நீங்க நாகர்கோவிலுல டூட்டிய