பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

53

ஒப்படைச்சுட்டு, மறுநாள் காலையில மெட்ராஸ்ல டூட்டில சேர்ந்துட்டு, சாயங்காலம் ரிசப்ஷன்ல மாப்பிள்ளைக் கோலம் போடலாம். அதாவது இந்தப் பொண்ணு கழுத்துல தாலி விழுந்தவுடனே டிரான்ஸ்பர் ஜெட்வேகத்துல வருமுன்னு சொல்ல வந்தேன்."

‘'நீ சொல்றதைப் பார்த்தால், கல்யாணம் ஆச்சுதா, முதலிரவு முடிஞ்சுதான்னு கிடையாது. அதுக்கு நாலைந்து நாளேக்குக் காத் திருக்கணும். உ.ம்...”

“சீ... பேசுறதப் பாரு...??

“சரிதாம்மா... வெட்கப் பட்டதுபோதும், இருக்கதே கொஞ்சநேரம். ஏதாவது பேசு ’’

“ஒன்று சொல்ல மறந்துட்டேனே. பொன்மணி என் கையைப் பிடிச்சுட்டு நேற்றுக்கூட அழுதாள். அவளேப் பார்க்கவே பரிதாபமாய் இருக்கு. கல்யாணத்தை நிறுத்தாட்டாலும் தள்ளியாவது போடுங்களேன்.’’

“நீ வேற... பெண்களோட மனம் ஆண்களுக்கும், ஆண்களோட மனம் பெண்களுக்குந்தான் தெரியும். இப்பவும் சொல்றேன். அந்தப் பைத்தியம் கல்யாணப் படபடப்பை, வேற விதமாய் நினைக்குது. கல்யாணம் ஆகட்டும் பாரு. வீட்டுப்படியை தாண்டுனாலும் தாண்டுவாள். ஆனல் நாகர்கோவிலை தாண்டவே மாட்டாள்."

“ஆமா .. போன வருஷம் 'உம்' முன்னு இருந்தீங்களாம். ஆனால் இந்த வருஷம் வெளுத்துக் கட்டுறீங்களாம். ஊர்ல இதுதான் இப்போ பேச்சு...!”

‘நான் பேசுறேன் என்கிறதைவிட நீ பேச வச்சுட்டே...!”

“நான் ஒங்களே வச்சேனோ இல்லியோ, மெட்ராஸ் மேடையில... பெண்கள் விடுதலையைப்பற்றி முழக்கம் செய்யுற நான்கூட... நீங்க என்னை அடிக்கிறவராய்