பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

நெருப்புத் தடயங்கள்

ராஜதுரையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒடிப் போன பயலோட அப்பன்கிட்ட என்ன பேச்சு? இவன் சித்தப்பா இல்ல; வேலைக்காரப் பயலோட அப்பன். இவனும், இவன் மகளும் இங்கே வந்து போனது தெரிந்தால், விஜயா வீட்டில் என்ன நினைப்பார்கள்? இது ஏன் இந்த தமிழரசிக்குத் தெரியல? அவளுக்குத் தெரியாது. நாம சொல்லிக் கொடுக்கலாம்...

ராஜதுரை வராண்டாவில் இருந்து குதித்து, மாடக்கண்ணு அருகே போய் நின்று கொண்டு, ஏகத்தாளமாகக் கொக்கரித்தான்.

"ஏய்யா பெரிய மனுஷா...ஒன் மகனை வழியனுப்பி வச்சுட்டு இப்போ ஒண்ணுந் தெரியாதவன் மாதிரி நடிக்கிறியாக்கும். மொதல்ல வீட்டை விட்டு மரியாதியா நடையைக்கட்டு. போறியா... கழுத்தைப் பிடிச்சுத் தள்ளட்டுமா?”

தமிழரசி, விக்கித்துப் போனாள். கலாவதி, தலை கழுத்தில் இருந்து துண்டானதுபோல் ஆடிப்போனாள். ஆனல் அந்த ‘பைத்தியாரத் தர்மர்' மாடக்கண்ணுவோ, கூடப்பிறந்த அண்ணன் மகன் வேறு யாரையோ பேசுகிறான் என்று நினைத்து, வழியைப் பார்த்தார். பகவதியம்மாளோ, எதுவும் நடக்காததுபோல், தன் வேலையைக் கவனித்தபடி நின்றாள்

எப்படியோ மாடக்கண்ணு நிலைமையைப் புரிந்து கொண்டு, துண்டை உதறிப்போட்டபடியே எழுந்தார். பிரமிப்பில் இருந்து விடுபட்ட கலாவதி, யதார்த்தத்தில் பொசுங்கி, ஒப்பாரிபோல் பேசினாள்,

“நாங்க ஒரு பாவமும் அறியாதவங்க அண்ணாச்சி... அந்த பாழாப்போற பாவி இப்படிப் பண்ணுவான்னு எங்களுக்குத் தெரியவே தெரியாது அண்ணாச்சி... ஓங்க கிட்ட அடைக்கலமுன்னு யோசன கேட்கத்தான்