பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத்தாளரும் பதிப்பாளரும்

பேராசிரியர்

ச. மெய்யப்பன், எம். ஏ.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சு. சமுத்திரம் அவர்கள் சமீப காலத்தில் புகழ் பெற்றுவரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது மூன்று சிறுகதைத் தொகுதிகளை ஒருசேர ஒரே நேரத்தில் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது. சிறந்த திறனாய்வாளர்களாகிய டாக்டர் கைலாசபதி, டாக்டர் சிவத்தம்பி, டாக்டர் நா. வானமாமலை ஆகிய அறிஞர் பெருமக்கள் மிகச்சிறந்த மதிப்பீடுகளை சிறு கதைகளுக்கு அளித்துள்ளனர். அவை இவர்தம் படைப்பாற்றலுக்குக் கட்டியம் கூறுகின்றன. ஆசிரியர் சமுத்திரத்தின் பத்து நூல்களைத் தொடர்ந்து மணிவாசகர் பதிப்பகம் மிகுந்த பெருமையுடன் வெளியிட்டுள்ளது.

எழுத்தாளருடைய எழுத்தும் கருத்தும் பரவுவதற்குப் பதிப்பகங்கள் பல்வகையில் துணை செய்கின்றன. இந்த ஆசிரியரின் நூலை இந்தப் பதிப்பகம்தான் வெளியிடும் என்ற நம்பிக்கையினை உண்டாக்கி, அவ்வாசிரியரின் புதிய படைப்புக்களை வரவேற்பதற்கான சூழ்நிலையை உண்டாக்குவன பதிப்பகங்கள். ஆசிரியரது நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் ஆசிரியரின் வளர்ச்சிக்கு உதவு:கின்றன. சிறந்த ஒரு பதிப்பகம் ஒரு ஆசிரியரின் நூலைத்