பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

83

“இவனுவ உடுப்புப் போட்ட உடனே, ஆடுற ஆட்டம். அப்பப்பா... ஏய்யா... எங்களெல்லாம் பார்த்தா ஒங்களுக்கு மனுஷனாய் தெரியாதா?”

தமிழரசியும் பேச்சை நிறுத்தவில்லை.

‘மிருகமாய் இருக்கிறவனையும் மனுசனாய் நெனைத்து நடத்த வேண்டியது போலீஸ். ஆனால் நீங்க மனுசனாய் இருக்கவனயும், மிருகமாய் நடத்தி, கேடுகெட்ட மிருகமாய் நடந்துக்கிட்டீங்களே! இந்த ஜனங்க கோபத்தை ஒங்களால தாக்குப்பிடிக்க முடியுமாய்யா?”

சப்-இன்ஸ்பெக்டர், தன்னையறியாமலே ச ற் று பலமாகக் கேட்டார். கிரிமினல் கோர்ட்டில், மூன்று வருஷம் வாங்கிக் கொடுக்கிற ஒரு செக்க்ஷனை நினைத்த படியே பேசினார்.

"மேடம்! நீங்க போலீஸ் மேல் பொதுமக்களை ஏவி விடுறீங்க. போலீஸ்னா அயோக்கியன்னு ஒரு புரளிய கிளப்பி விடப் பார்க்கீங்க.”

"பிரச்சனையை திசை திருப்பாதய்யா. எனக்கும் பெண் போலீஸ் சிநேகிதிகள் இருக்காங்க. கண்ணியமான போலீஸ்காரங்க பலர் எனக்குத் தெரியும். அவங்கபடுற பாடும் புரியும். போலீஸ்படை, தமிழ் நாட்ல எப்படி இருக்குதுன்னு ஒங்ககூட நான் பட்டிமன்றம் நடத்தல. அதுக்கு அறிவு வேணும்.”

“அப்படின்னா..."

"அறிவு சரியாய் பயன் படாட்டாலோ இல்ல குதர்க்கமாய் பயன்பட்டாலோ அது அடிமுட்டாள்தனம், ஒங்களுக்கு அறிவு இருந்திருந்தால், இந்தப் பொண்ண இப்டி அடிச்சிருப்பீங்களா? இந்த மனுஷரை இப்டி சித்ரவதை செய்திருப்பீங்களா? சட்டப்படி விசாரிங்க. நான் வேண்டான்னு சொல்லல. ஆனல் சட்டத்துக்குப் புறம்பா, எதுக்குய்யா இப்டி அடிக்க வச்சே? நீ அக்கா தங்கை