பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

ஆப்பிரிக்காவில் நிலைபெற்றிருந்த கொடுமையான இன ஒதுக்கல் கொள்கையை ஒழிப்பதற்காகப் போராடி மக்கள் வாழ்வு நலம் பெறுவதற்காகப் பாடுபட்டதனால், நெல்சன் மண்டேலாவுக்கு 1993 ஆம் வருடம் நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.

1993 டிசம்பர் 10 ஆம் நாள் நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மண்டேலா அப்பரிசினை ஏற்றார். அப்போது உணர்ச்சிகரமான ஏற்புரையை அவர் நிகழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்க மக்களின் உரிமைகளுக்காகப் போராடி ஏற்கெனவே நோபல் அமைதிப் பரிசு பெற்ற அவருடை முன்னோடிகளை அவர் நினைவு கூர்ந்தார். அவ்வாறு சிறப்புப் பெற்ற முன்னோடிகளில் மிக முக்கியமானவரான மார்டின்லூதர் கிங் என்கிற ஆப்பிரிக்க - அமெரிக்க அரசியல்வாதியும், சர்வதேசவாதியுமான மாமனிதருக்கு உரியமுறையில் புகழாரம் சூட்டினார்.

நாங்கள் எதிர்கொள்ள நேரிட்ட, தற்காலத்தில் பெரிய பிரச்சினைகள் சிலவற்றுக்கு நியாயமான தீர்வினை அடைவதற்காக உரியமுறையில் போராடியவர், அந்த முயற்சியிலேயே தனது உயிரை அர்ப்பணித்தவர் மார்டின் லூதர் கிங் என்று மண்டேலா குறிப்பிட்டார்.

யுத்தம்-சமாதானம், இம்சை-அகிம்சை, இனவாதம்-மனித கெளரவம், துன்பப்படுத்துவது-அடக்கி ஒடுக்குதல், விடுதலை மற்றும் மனித உரிமைகள், வறுமை மற்றும் தேவைகளிலிருந்து


வல்லிக்கண்ணன் • 47