பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவுரவ ஆயுள் உறுப்பினராக மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகெங்கணும் உள்ள ஐம்பத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் மேயர்கள், நெல்சன் மண்டேலாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக் கையெழுத்திட்ட விண்ணப்பம் 1982 ஆகஸ்டில் தயாரானது.

மண்டேலாவை விடுதலை செய்க என்று ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு குரல் கொடுத்தது.

ரோம் நகரத்தின் கெளரவ பிரஜா உரிமை 1983இல் மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டது. அதற்கான பத்திரத்தை மொஸாம்பிக் நாட்டின் துணைத்தலைவர் பெற்றுக் கொண்டார்.

கிரேக்க நாட்டின் புராதன ஒலிம்பிக் போட்டிப்பந்தய விளையாட்டுகளின் நகரமான ஒலிம்பியாவின் கெளரவக் குடியுரிமை அவருக்கு வழங்கப்பட்டது.


வல்லிக்கண்ணன் • 59