பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதன் வருடாந்தர மாநாட்டுக்கு மண்டேலா விருந்தினராக வர வேண்டும் என்று பிரிட்டனின் தொழிற்கட்சியினர் அழைத்தார்கள்.

நெல்சன் மண்டேலாவை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும், அவர் விடுதலையாகி வந்தால் அவருக்கு அரசியல் பாதுகாப்பு அளிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் நெதர்லாந்து அரசு தென் ஆப்பிரிக்க அரசாங்கத்துக்குத் தெரிவித்தது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள நேட்டால் யுனிவர்சிட்டியின் சான்சலர் பதவிக்கு, மாணவர் பிரதிநிதிக் குழுவினர் மண்டேலா பெயரை முன்மொழிந்தனர்.

பிரிட்டனில் உள்ள லங்காஸ்டர் யுனிவர்சிட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

வேலஸ் நாட்டின கார்டிப் நகரம் அதன் தெருக்களில் ஒன்றுக்கு நெல்சன் மண்டேலா பெயரைச் சூட்டியது.

வார்விக் யுனிவர்சிட்டி மாணவர்களும், சவுத் பேங்க் பாலிடெக்னிக் மாணவர்கள் சங்கமும் தங்கள் அறைகளுக்கு ‘நெல்சன் மண்டேலா அறை’ என்று பெயரிட்டு அவரைக் கவுரவப்படுத்தினார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் தென்ஆப்பிரிக்க மிஷன் முன்னால் உள்ள சவுக்கத்துக்கு, ‘நெல்சன் மற்றும் வின்னி மண்டேலா பிளாசா’ என்ற பெயரை நியூ யார்க் நகரம் சூட்டியது.

1984இல், புரூசேல்ஸ் யுனிவர்சிட்டி மண்டேலாவுக்குக் கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

லண்டனில் காம்டன் பரோ வட்டாரத்தில், இன ஒதுக்கல் முறைக்கு எதிரான இயக்கத்தின் தலைமைச் செயலகம் இருக்கும் தெருவுக்கு ‘மண்டேலா தெரு’ என்ற பெயரை காம்டன் பரோநகரசபை சூட்டியது.

பிரிட்டிஷ் பாப் இசைக் குழுவின் விசேஷப் பிரிவினர் ‘நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்’ என்றொரு


62 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா