பக்கம்:நெற்றிக்கண்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. வார்த்தசாரதி 11 I

. -அவள் உட்கார்ந்தாள். அவளது குரலில் மலையாள மழலை தொனித்தது.

- 'உங்களுக்கு gegn fr?**

"பாலக்காடு! இங்கே ஹாஸ்டலில் தங்கிப் படிக் கிறேன். உங்கள் நாவல் நேற்றிரவு முழுவதும் என்ன்ை அழவைத்து விட்டது. அதைப் படித்த பிறகு என் மனத்தில் புண்ணாக உறைந்து போயிருக்கும் சில நிகழ்ச்சி களை உங்களிடம் சொல்லி ஆறுதல் பெறலாம் என்று தோன்றியது...'

"இன்றைக்கு நீங்கள் க ல் லூ ரி க் கு ப் போக வில்லையா?"

'காலையில் லீவு சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். மத்தியானம் போகவேண்டும்...'-அவள் குரலில் ஏதோ ஒருவிதமான சோகம் இடறுவதைச் சுகுணனால் உணர. முடிந்தது. அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான் அவன்.

ஆறாவது அத்தியாயம்

'நெஞ்சுக் குழியிலிருந்து தண்ணீர்த் தாகம் எடுப்பதுபோல், மனித ஆன்மாவுக்குள் ஒரு தாகம் உண்டு. அதுதான் சத்தியதாகம்-'

கதையில் துன்பப்படுகிறவர்களைப் படைத்துப் படைத்து அனுபவம் அடைந்தவனால்கூட அசல் வாழ்க்கை

ல் துன்பப்படுகிறவர்களை நேரே கண்டுவிட்டால் ஒரிரு கணங்கள் திகைத்துப் போவதைத் தவிர, வேறொன்றும் செய்ய முடிவதில்லை. அப்படி ஒரு திகைப்புடன் தான் அந்தப் பெண்ணை எதிர்கொண்டான் சுகுணன், காரியால யத்து அறையில் முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண் தன்னுடைய நாவல்களைப் படித்து அவற்றில் ஈடுபட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/113&oldid=590484" இலிருந்து மீள்விக்கப்பட்டது