பக்கம்:நெற்றிக்கண்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 13

பாலக்காட்டினதாக ஆகிவிட்டதுமான ஒரு குடும்பத்தில் ஒட்டல் சமையற்காரரான ஒர் ஏழைத் தந்தையின் பதினொரு பெண்களில் ஒருத்தியாக அவள் பிறந்ததாகச் சுகுணன் அறிந்து கொண்டான். தன் குடும்பத்தின் பயங்கர மான ஏழ்மைச் சூழ்நிலையையும் பிறவற்றையும் சொல்லி, முடித்துவிட்டுச் சில கணங்கள் தயங்கியவளாக அடுத்துத் தான் சொல்ல இருப்பதை எப்படித் தொடங்குவதென்று தன் பேச்சுக்கு முகம் செய்யத் தெரியாமல் இருந்தாள் அவள். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின் பெண்களுக்கே உரிய எதிர்பாராத சாமர்த்தியத்தோடு அவள் தன் பேச்சைத் தொடங்கினாள்.

' கிழிந்த புடவையும் எண்ணெய் காணாத தலையும் தளர்ந்த நடையும் இடுப்பில் குழந்தையுமாக இந்தத் தேசத்தின் பெரிய நகரங்களின் வீதிகளில் அங்கங்கே பிச்சைக்குத் திரியும் அபலைப் பெண்களைக் காணும் போதெல்லாம் 'வந்தே மாதரம்'-என்று சொல்ல ன்ன் வாய் தயங்குகிறது. உண்மையான பாரதமாதா இந்த அபலைப் பெண்களிடம் அல்லவா இருக்கிறாள்! இவர்களுக் கெல்லாம் சரியான சமுதாய மதிப்புக் கிடைக்கிற வரை என் பாரதத்தாய் நான் செய்யும் வணக்கத்தை உண்மை யாக ஏற்பாளா என்று எனக்குப் பயமாயிருக்கிறது. சகோதரிகளைப் பிச்சைக்கு அலைய விட்டுவிட்டு நான் தாயை வணங்குவதில் அர்த்தமோ மரியாதையோ எப்படி இருக்க முடியும்?-' என்று நீங்கள் பாலைவனத்துப் பூக்களி"ல் எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதியிருக்கிற வரிடம் நான் மனம் விட்டுப் பேசுவதற்குத் தயங்கக்கூடாது. ஆனாலும் கூட நான் கேட்க வேண்டியதைக் கேட்க எனக்குத் தயக்கமாயிருக்கிறது. என் சகோதரிகளில் மூத்தவர்கள் நாலு பேருக்குக் கல்யாணமாகிவிட்டது, அடுத்த மூன்று பேர் ஊரிலேயே பள்ளிக்கூட டீச்சராகவும்: அலுவலகங்களில் டைப்பிஸ்டுகளாகவும் உத்தியோகம் பார்த்துக் குடும்பத் தேரை இழுத்துச் செல்வதில் தந்தைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/115&oldid=590486" இலிருந்து மீள்விக்கப்பட்டது