பக்கம்:நெற்றிக்கண்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 24 நெற்றிக் கண்

கொடுக்கவோ, இணங்கியதே இல்லை. சராசரி இந்தியப் பத்திரிக்கை முதலாளிகள் எல்லாரும் செய்வதைப்போலவே பத்திரிகையின் புத்தி சம்பந்தமான காரியங்களுக்கு உண்மை வில் பொறுப்பாயிருப்பவன் யாரோ அவனுக்கு வெறும் சம்ப ளத்தை மட்டும் வீசி எறிந்துவிட்டு, ஆசிரியரும் அச்சிடுபவ ரும் வெளியிடுபவரும் என்று பத்திரிகை முதலாளியே எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துத் தன்னுடைய பேரைப் போட்டுக் கொள்கிற வழக்கம்தான் நாகசாமியிடமும் இருந் தது. இதைப்பற்றி உழைக்கும் பத்திரிகையாளர்களின் கூட் உங்களில் இரண்டொருமுறை பேசும்போது, ஆசிரியரும் அச்சிடுபவரும். வெளியிடுபவரும்’-என்பதோடு சேர்த்து "விற்பவரும் என்று கூடப் போட்டுக் கொள்ளலாமே என்று குத்தலாகப் பேசியிருந்தான் சுகுணன். நாகசாமிக்குப் பத்தி சிகைத் தொழிலின் கெளரவத்தைப் பற்றியோ, தரத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரியாது. சுகுணன் துளசியிடமே பல முறை கேலியா வும் கடுமையாகவும், உன் அப்பா பத்திரி கைகளா நடத்துகிறார்? நிறையவும் விதவிதமான கலரிலும் ப்ேப்பர் அடித்துத் தள்ளுகிற ஒரு பெரிய பேப்பர் மில் நடத் துவதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்?’ என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறான். நிர்வாக ஊழல் களைத் தொடர்ந்து அநுமதிப்பதும், பத்திரிகையின் தரத் துக்கு உயிர் நாடியாயிருந்து அதைக் காப்பாற்ற வேண்டிய எழுத்தாளர்களைக் குறைவாக நடத்துவதும், இச்சகம் ப்ேசுவதையும் அசிங்கமாக முகஸ்துதி செய்வதையுமே தொழிலாகக் கொண்ட விளம்பர மானேஜர்கள்ையும், சர்க் குலேஷன் மானேஜர்களையும் பத்திரிகையின் உயிர் நாடிக ளாக நினைப்பதும் நாகசாமியின் வழக்கங்களாக இருப்பதை உள்ளுற அவன் வெறுத்தான். நாகசாமி மற்றவர்களிடம் ப்ேசும்போது வாய்தவறிச் சொன்னால் கூட வீ.ஆர்.ரன் னிங் எ பிளினஸ்-என்று சொல்லுவாரே ஒழிய வீ.ஆர். ரன்னிங்-ஏ-மேகஸின்'-என்று பூம்பொழிலைப் பற்றியோ தமக்குச் சொந்தமான இன்னொரு பத்திரிகையைப் பற்றி யோ சொல்லவே மாட்டார். அட்வர்டிஸ்ட்மெண்ட் மர்ன்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/126&oldid=590498" இலிருந்து மீள்விக்கப்பட்டது