பக்கம்:நெற்றிக்கண்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - நெற்றிக் கண்

வந்தது அலுவலக வேலையாகத்தான் என்றாலும் வேண்டா வெறுப்பாக அவரை வரவேற்றான் அவன்,

"மிஸ்டர் சுகுணன்! இந்தச் சமயத்தில் நீங்கள்தான் பெரிய மனசு பண்ண வேணும். பூம்பொழில் வரப்போகிற, இதழில் உங்கள் டம்மி'ப் (மாதிரி ஃபார அமைப்பு) படி பத்துப் பக்கம் ரீடிங் மேட்டரும் ஆறு பக்கம் விளம்பரமும் மூன்றாவது பாரத்தில் போட்டிருக்கிறது. அதை எப்படி யாவது ஆறு பக்க ரீடிங் மேட்டராகவும்-பத்துப் பக்க விளம்பரமாகவும் மாற்றிக் கொடுத்தால் நல்லது...'

“ந்ல்லதென்றால் யாருக்கு நல்லது? உங்களுக்கா, எனக்கா? வாசகர்களுக்கா?’ என்று சிரித்துக் கொண்டே கொஞ்சம் அமுத்தலாகவே அவரைக் கேட்டான் சுகுணன்.

ரங்கபாஷ்யமும் கொஞ்சம் எரிச்சல் மூட்டுகிறார் போலவே பதில் கூறினார்!- -

'உங்களுக்குமில்லை! எனக்குமில்லை! பத்திரிகைக்குத் தான்." *..

" அப்படி நீங்கள் நினைக்கலாம். நான் நினைக்க முடியாது. மூன்றாவது பாரத்தில் பத்துப் பக்க அளவு வருகிறாற்போலச் சிறந்த எழுத்தாளர் ஒருவரின் அருமை: யான கதை ஒன்று வெளிவர இருக்கிறது. அந்தக் கதையை நாலு பக்கம் குறைத்து ஆறு பக்கமாக எடிட்' செய்தால் கதை சீரழிந்து உருக்குலைந்து போகும். கதையை இந்த, இதழில் போடாமல் அடுத்த இதழுக்கு மாற்றி விடலா மென்று பார்த்தால் அதற்கும் வழி இல்லாதபடி அந்தக் கதை இந்த இதழில் வெளிவருமென்று சென்ற இதழிலேயே அறிவிப்புச் செய்தாயிற்று. ஒவ்வோர் இதழிலும் பத்திரிகை யின் மொத்தப் பக்கங்களான நூறு பக்கங்களில் மூன்றில் ஒரு பங்காக முப்பத்து மூன்று அல்லது அதிகபட்சமாக முப்பத்தைந்து பக்கங்கள் விளம்பரத்துக்கு ஒதுக்க வேண்டு மென்று காரியாலய நடைமுறை இருக்கிறது. இந்த இதழில் முப்பத்தைந்து பக்கம் விளம்பரத்துக்காக விட்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/128&oldid=590500" இலிருந்து மீள்விக்கப்பட்டது