பக்கம்:நெற்றிக்கண்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 127

கிறோம். அப்படி இருந்தும் நீங்கள் இம்மாதிரி வாதிடுவது: நன்றாயில்லை. கதைகளைக் கண்டபடி உருக்குலைத்துப் போடுவது நாணயமான காரியமில்லை; நான் ஓர் எழுத் தாளன். அதனால் மற்ற எழுத்தாளர்களின் மனச் சாட்சியை என்னால் புறக்கணிக்க முடியாது.'

"ஆனால் ஒன்றை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள

வேண்டும் மிஸ்டர் சுகுணன்! எழுத்தாளர்களுக்கு நாம் பணம் கொடுக்கிறோம். விளம்பரதாரர்களோ நமக்குப் பணம் கொடுக்கிறார்கள்-என்று கோபக் குமுறலோடு ரங்கபாஷ்யம் இரைந்த குரலில் ஆங்கிலத்தில் சொல்லி விட்டு எழுந்திருந்தபோது, -

"மிஸ்டர் ரங்கபாஷ்யம்: ப்ளீஸ் கீப் யுவர் லிமிட்ஸ். ஐ டோண்ட் வாண்டு டிஸ்கஸ் வித்யூ -என்று தெளிவான குரலில் மனத்தின் ஒரே வலிமையாகிய நக்கீர தைரியத் தோடு இருந்த இடத்தில் இருந்தபடியே அவருக்குப் பதில் கூறினான் சுகுணன்.

'ஐ வில் டேக் திஸ் மேட்டர் டு தி நோட்டீஸ் ஆஃப்தி மானேஜ்மெண்ட்........... ."-என்று கோபமாக அவனிடம் இரைந்து கத்திவிட்டு வெளியேறினார் ரங்கபாஷ்யம்.

"அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை' என்று அவரைச் சாடி அனுப்பினான் சுகுணன். சொல்லி வைத்தாற்போல் ரங்கபாஷ்யத்தின் தலை மறைந்த மறுகணமே சர்மா சுகுணனின் அறையில் தலை நீட்டினார். - . . . .

"அவனிடம் ஏன் வீண் வம்பு வைத்துக்கொள்கிறீர்கள் சுகுணன்? பெரிய ரெளடியாச்சே?' என்று சுகுணனுக்கு அதுதாபப்படுகிறவர் போல் ரங்கபாஷ்யத்தை ஏக வசனத் தில் பேசினார் சர்மா. -

'ரெளடியாயிருந்தால் ரயில்வே பிளாட்பாரத்தில் * - திரிய வேண்டும். புத்தியுள்ளவர்களின் அறிவு இயக்கமாகிய பத்திரிகைக் காரியாலயத்திற்குள் வரக்கூடாது' என்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/129&oldid=590501" இலிருந்து மீள்விக்கப்பட்டது