பக்கம்:நெற்றிக்கண்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த் தசாரதி 143

அதற்கில்லை...இவ்வாறு பயன் மரம் நாடிசி செல்லும் பறவைகள் போல் வள்ளல்களை நாடிப் புகழ்தல் புலவர் மரபு'-என்று மரபைச் சாட்சிக்கு அழைத்தார். . 'ரொம்ப நல்லது! இந்த மாதிரிப் பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள்'- புலவர் மரபு-போன்ற வாக்கியங் களையெல்லாம் ஏதாவதொரு தமிழ்த் துணைப்பாட து.ாவில் எழுதுங்களேன். வீணாக இப்படிப் புகழ் பாடுதலில் இறங்காதீர்கள் ஐயா!'- என்று சிரித்துக்கொண்டே "அவருக்குப் பதில் சொல்லி விட்டு அந்தக் கவிதையையும் திருப்பிக் கொடுத்து அனுப்பியிருந்தான் சுகுணன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிறிது காலம் பாண்டுரங்கனார் சுகுண னைப் பார்க்க வருவதற்குத் துணிவின் நியோ என்னவோவரவேயில்லை. அதற்குப் பிறகு "ஆகாச வாணியில் காலை வேளையில் அவருடைய் கட்டைக் குரவில் அருள் வாக்கு. ஒலிப்பதைத் தெருவில் போகும்போதோ கண்ணப்பா வாட் ஜின் எதிர் வீட்டு மாடியில் அதிகாலை ரேடியோ அலறும் போதோ, கேட்க நேருகையில் கம்பளிப்பூச்சி அரிப்பது போலப் பாண்டுரங்கனாரின் ஞாபகம் இலேசாக வந்து போகும். இப்போது இந்த முன்னிர்வின் சுகமான வேளையை எல்லாம் பாண்டுரங்கனாரின் போரில் சிக்கிக் கழிக்க வேண்டியிருக்குமோ என்று சுகுணன் வருந்தி னான். அன்போடும், பிரியத்தோடும் "ரூஃப்கார்டனில்" விருந்துண்ண அழைத்த துளசியின் அழைப்பைப் புறக் கணித்து மறுத்தனுப்பிய பாவம் தான் இப்படி உடனே பவித்துப் பாண்டுரங்கனாரின் வருகையாக நேர்ந்து விட்டதோ என்றுகூட எண்ணினான் அவன்.

'வந்த காரியத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்கள் ஐயா! எங்கே இப்போதெல்லாம் இந்தப் பக்கத்தில் தென் படுவதேயில்லை? அமைச்சர்கள், எம். எல். ஏ., எம்.பிக்கள் டெப்டி செகரெட்டரிகள், எல்லாரும் நிறைய நண்பர். களாகிவிட்டார்கள் போலிருக்கிறது. அதனால் தான் சாதாரணமானவர்களுடைய கண்களில் படவே மாட்டே னென்கிறீர்கள்?'-என்று குத்தலாகக் கேட்டபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/145&oldid=590519" இலிருந்து மீள்விக்கப்பட்டது