பக்கம்:நெற்றிக்கண்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - நெற்றிக் கண்

'நான் அப்பாவிடம் சொல்லி வேறே படம் வாங்கித் தரேன் நாயுடு! இது அவ்வளவு நல்லாவாயிருக்கு?'-என்று அவள் வார்த்தைகளை இழுத்த போது,

"அதுக்கென்னமா உன் இஸ்டப்படி செய்யி' என்றார் அவர். பத்துப்பதினைந்து நிமிடங்களில் அவர் சுகுண னுடைய அறைக்கு வந்த கர்ரியம் முடிந்து விட்டது. அச்சுத் தாள்களோடு அவர் திரும்பி விட்டார். திரும்பிப் போனவர் மீண்டும் உடனே திரும்பி வந்து கதவைத் திறந்து. "படம் நல்லதா உனக்குப் பிடுச்சுதாப் பார்த்துச் சீக்கிரம் அனுப்பிடு குழந்தை! இந்த வாரமே வந்தாகணும்?' என்று மறுபடியும் துளசியிடம் ஞாபகப்படுத்தி விட்டுப் போனார். அவர் போன மறுகணமே சுகுணன் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கண்களுக்கு முன்பாகவே அந்தப் புகைப் படத்தை வெறுப்போடும் ஆத்திரத்தோடும் சுக்கல் சுக்கலாகக் கிழித்து அவன் காலடியிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள் துளசி,

'இது தவறு துளசி இங்கு வருகின்ற எதையும் பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ கிழித்தெறியவோ ஆசிரிய ருக்குத் தான் உரிமை உண்டு...' -

"நிராகரிப்பதற்குக்கூட ஒர் உரிமை வேண்டும் போலிருக்கிறது."- -

  • * 舞季

சுகுணனால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.

இப்போது உங்களுக்குத் திருப்திதானே?' - ' என்னுடைய திருப்தி அதிருப்திகளை இன்னொருவர் சம்பந்தப்பட்ட உணர்வுகளாக இனிமேலும் நான் விட வேண்டிய அவசியமில்லை துளசி! நீ செய்வதெல்லாம் உனக்கே நன்றாயிருக்கிறதா? பழையபடி குழந்தைத் தன. மாகத் தனியே புறப்பட்டு நீ இப்படி இங்கே என்னைப் பார்க்க வரலாமா? வந்தது தான் வந்தாய்! எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/56&oldid=590423" இலிருந்து மீள்விக்கப்பட்டது