பக்கம்:நெற்றிக்கண்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 59

போன். அந்தத் தனி டெலிபோனைக் கையிலெடுத்துத் தன் வீட்டு எண்ணுக்கு டயல் செய்தாள் துளசி. இப்படிச் செய் யும்போது செயற்கையாக வரவழைத்துக் கொள்ளப்பட்ட ஒருவகை மலர்ச்சியும் சிரிப்பும் அவள் முகத்தில் தென்பட் டன. சுகுணன் அவளுடைய உரையாடலைக் கவனித்துக் கேட்பதிலிருந்து அந்த நிலையில் அந்த இடத்தில் தன்னை விலக்கிக்கொள்ள முடியவில்லை. . -

'அம்மாவா? நான் தான் துளசி பேசுகிறேன். அப்பா இருந்தால் கொஞ்சம் கூப்பிடேன்...'

அப்பா வந்து போனை எடுத்திருக்க வேண்டுமென்று: அதுமானித்தான் சுகுணன். -

"நான்தான் துளசி. இங்கே நம்ம பூம்பொழில் ஆபீசிலி ருந்து பேசறேன் அப்பா. காலையிலே கோடைக்கானலுக்கு டிக்கட் வாங்கச் சொல்லியிருந்தீர்களே; அதை உடனே கான்ஸல் பண்ணிடனும்...'

鐵°尊 * * 細發* 率始蚤 毅 晦 食 海* 象 孵 唸 ↔ 哈 s 海

"இல்லே! கண்டிப்பா முடியாது அவரிடமும் நீங்களே எப்படியாவது எடுத்துச் சொல்லிவிட வேண்டும். திடீ ரென்று உங்களையெல்லாம் விட்டுவிட்டுத் தனியாகப் போகப் பிடிக்கலை எனக்கு. என்னவோ போலிருக்கு: மாப்பிள்ளையிடமும் பக்குவமாக அவர் கோபித்துக் கொள் ளாமல் நீங்க்தான் இதைச் சொல்லணும்.'

感”感 診 戀 * = * * * * * * * * * * 曾经也受豪爱

"ப்ளிஸ்! தயவு செய்து நான் சொல்றபடியே கேளுங்க அப்பா’. இந்தக் கடைசி வார்த்தையைப் பேசுகிற்வரை அவள் முகத்தில் இருந்த சிரிப்பும் மலர்ச்சியும் மறைந்து மறுபடி அவள் முகம் இருண்டது. - -

துளசி ஃபோனை வைத்துவிட்டு அவன் பக்கமாகத் திரும்பி ‘'இப்போது உங்களுக்குத் திருப்திதானே?' என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/61&oldid=590429" இலிருந்து மீள்விக்கப்பட்டது