பக்கம்:நேசம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா95


"'உங்களுக்குச் சொந்தமாக ஆன அந்த ஒரு நிமிஷத் தையும் அவர் காலில் காணிக்கையாகச் சேர்த்துட்டேள். உங்களுக்குத் தனியாகப் பிரகாசிக்கனும் என்கிற ஆசையே இடையாதா?’’ ' என்ன சொல்றே ராஜி, எனக்குப் புரியல்லையே!” "'உங்களுக்கு ஒண்ணுமே புரியாது. உங்களுக்குச் சொந்தம்னு எதுவுமே கிடையாதான்னு கேட்கிறேன். "இடுப்பு வேஷ்டி ஏது? அண்ணா கொடுத்தார். இந்தத் சொக்காயை இதுவரை நான் பார்க்கல்லியே?’ அன்னா வோடது. தனக்குச் சின்னதாப் போயிடுத்துன்னு கொடுத் தார். கச்சேரி சன்மானத்தில் உங்க ரெண்டு பேருக்கும் சம பங்கா?' 'எனக்கென்ன தெரியும்? அண்ணா கொடுத்தது, அவர் என்ன கொடுத்தால் என்ன?’ கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப்போச்சு. நீங்கள் புதுசா வேட்டி வாங்கினாலும் அவர் கட்டி அவிழ்த்துப் போட்டதைக் கட்டிண்டால்தான் உங்களுக்குக் கட்டிண்ட மாதிரி இருக்கு? இல்லையா?* சாமா புன்னகை புரிந்தான். ராஜி உனக்கும் புரியாது. ஆனால் புரியாமலே உண்மையை இவ்வளவு தெளிவாகச் சொல்ல எப்படி முடிகிறது?’’ எனக்குப் புரிஞ்சவரைக்கும் போதும், நாம்தாம் தனியா வந்துட்டோமே. ஆனால் உங்கள் வாசம் பூரா ஏன் அங்கே? காலையில் சாதகம்னு போயிட்டு வந்து அவசர அவசரமா அள்ளிப் போட்டுண்டு ஆபிசுக்கு ஒடறது. சாயந்திரம் ஆபிசிலிருந்து நேரே அங்கேதான் ஆஜர். ராத்ரி பத்துமணிக்கு வந்து கதவைத் தட்டறது. இங்கே நான் மெனக்கெட்டு ஸ்பெஷல் சமையல் பண்ணி வெக்கண்டு காத்திருந்தால், சாப்பிட்டுட்டு வந்துட்டேன்கறது. அந்தப் புளிச்ச பழையதும் சுண்டக்குழம்பும் உங்களுக்கு மணக்கறது, அங்கே என்ன பூனைக்குட்டி மாதிரி சதா சர்வமும் அவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/101&oldid=1403549" இலிருந்து மீள்விக்கப்பட்டது