பக்கம்:நேசம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா97


அதுவும் ஞாயிறு காலை பிடித்தால் வாரம் பூரா விடாதாமே! வீடு விடிஞ்சாப்போலத்தான்! சொட்டலுக்கு அங்கங்கு தானே வைத்திருக்கும் ஏனங்களை ஒரக் கண் கண்டு கெளரி அதைரியமுற்றாள். சொட்டலா? அப்படி அப்படியே ஊத்ததது. சமையலறையில் மேலண்டைச் சுவர் கண்ணிர் வடிக்கிறது. aேs அடுப்புப் பாழ்தான், தரை தெப்பல், சொந்த வீட்டுக்கு அவர் பட்ட ஆசையைக் கண்டுகொண்டு தரகன் பண்ணினது துரோகம்; தலையில் கட்டிவிட்டான். சும்மா, அங்கங்கே ஒட்டுப் போடக் கை வெச்சால் ரூவா மூணு எகிறும். எங்கே போறது? கெளரி எழுந்துபோய்க் காற்றிலடித்துக் கொள்ளும் ஜன்னலை மூட முயன்றாள் சட்டத்துக்கும் சுவருக்கும் விட்டுக்கொண்டதால் கதவு மக்கர் பண்ணிற்று. மின்சாரம் "கோவிந்தா இங்கேயே முணுக்குன்னாலே விளக்குக்கு மங்களம். குத்துவிளக்கை ஏற்றிக் கூடத்தில் வைத்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்த்தாள். ஊஞ்சல் முனகிற்று, லோகம் துரோக மயம். அவர் நேற்று இரவுதான் தஞ்சாவூருக்கு வண்டியேறினார். அங்கு நிலக் குத்தகைக் காரன் துரோகம். மூணு போகமா ஏமாத்தறான். அப்போத் தானே ஐயர்வாள் நிலத்தை அவன் சொன்ன விலைக்கு அவனுக்கு விற்றுவிடுவார் விற்றேயாகணும். இப்படியே அவன் ஒட்டி ஒட்டிப் பெரிய பூமியாலே வளைச்சுப் போட் டாச்சு, இந்தத் தடவை விற்றுத் தொலைத்துவிடத்தான் சபேசன் போயிருக்கிறான். காலமே துரியோதனன் காலத்தி விருந்தே துரோகத்துக்குத்தான். 'ஊசிமுனை குத்தளவுக்குக் கூட மண் தரமாட்டேன். நம்மைப்போல வாயில்லாப் பூச்சிகளுக்குக் கையாலாகாத கப்பிகளுக்கு, குத்துவிளக்குத் தான் துணை சுவாமி அலமாரியில் சம்புடத்திலிருந்து உதிரி விபூதியெடுத்து நெற்றிக் குங்குமத்தின் கீழ், நாசிப் பள்ளத் தில் இட்டுக்கொண்டாள். நே.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/103&oldid=1403551" இலிருந்து மீள்விக்கப்பட்டது