பக்கம்:நேசம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98லா. ச. ராமாமிர்தம்


மழையின் போக்கைப் பார்த்தால் இது வெறும் அம்பத்தூர் ஸ்பெஷலாகத் தோன்றவில்லை. அப்படி ஒன்று உண்டு; அவர்கள் வீட்டைச் சுற்றி மட்டும் சேறாக்க, கணக்கிட்டால், மழைக் காலத்தில் மழையென்னவோ மிஞ்சி மிஞ்சிப் பத்து நாட்களுக்கு மேல் இல்லை. ஆனால் சேறு காய ரெண்டு மாதம் வெளியே போகையிலும் உள்ளே வருகையிலும் சேறு பூட்ஸ் போட்டுக்கொள்கையில் அந்த இரண்டு மாதங்களில் உலகமே "சீ...” நேற்று வரை வெயில் தாளமுடியவில்லை. இந்தக் கோடையே கொடுமைதான். அவள் அப்பா பள்ளிக்கூட வாத்தியார். அவர் பாடம் சொல்கையில் அவள் கேட்டிருக்கிறாள்.

  • கலிமுற்றி, கடைசியாக ப்ரளயம் ஏற்படும். மழை கோட்டுக் கொட்டெனக் கொட்டும். மூணு நாள் கொட்டி உலகமே அழியும். ஆனால் மழை வருவதற்கு முன்னால், நாற்பது நாட்கள் வெயில் அப்படிக் காயுமாம் பதினெட்டுக் சூரியர்கள் கண்ணுக்கே தெரியுமாம். டேய் குசவா"வகுப்பில் ஒர் உடையார் பையன்-'சூளைக்கு நல்லதாச் சுன்னு நீ பாட்டுக்குப் பானையை அடுக்கிடாதே. தண்ணிடா அத்தனையும் தண்ணி. மழை அப்படித்தான் பெய்கிறது.

அவர் ஊருக்குப் போய் அங்கே மாட்டிண்டிருக்கார். நான் இங்கே. சாமா அவன் வீட்டில். சாமா பலவிதங்களில் மாட்டிக் கொண்டிருக்கிறான். ராஜி படி மிதித்து உள்ளேவந்து அவர்கள் சேர்ந்திருந்த அந்தப் பதினைந்து நாட்களுக்குள், கெளரி ராஜியைப் புரிந்து கொண்டுவிட்டாள். ஆனால் வெளிக் காட்டிக்கொள்ள வில்லை. சபேசனிடம்கூட சத்தம் பண்ணாமல், தானே தேடி அலைந்து, மூன்று தெருக்கள் தாண்டி, சாமாவுக்கு இடமும் பார்த்துவிட்டாள். சாமாவின் உரத்த ஆட்சேபங்களுக்கு அவளுடைய பதில் இதுதான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/104&oldid=1403552" இலிருந்து மீள்விக்கப்பட்டது