பக்கம்:நேசம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102லா. ச. ராமாமிர்தம்


"அவள் கிடக்காள். நீங்கள் எப்படியிருக்கேள்? அவன் கண்கள் சுற்றும் முற்றும் ஓடின. "வீடு ரொம்ப மோசமாம் போயிட்டாப் போலிருக்கே: 'இந்த மழைக்குக் குபேரக் கோட்டைகூடத் தங்காது. சாமா, அவளை விட்டுட்டு நீ வந்திருக்கப்படாது.டா." " மன்னி, நீங்கள் அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவளைப்பற்றி யாருமே கவலைப்படி, வேண்டாம்.' "என்னடா உளர்.றே?’’ 'இல்லை மன்னி. அவளைப்போல மனுஷாள் எங்கிருந் தாலும், எப்படியாகிலும், தங்கள் செளகரியத்தையோ பத்திரத்தையோ குறைச்சுக்கமாட்டா, எதுக்கும் துணிஞ்: சவா. பெண் சிலந்தி." கெளரிக்கு அடிவயிற்றில் பகீரென்றது. "என்னடா சாமா சொல்றே? கொஞ்சம் புரியும்படியா சொல்.

  • * *

லேண்டா? 'புரியறதுக்கு என்ன மன்னி இருக்கு?’’ “அவள் உடம்பு விச்சாயிருக்கோளோன்னோ? ஏதேனும் அவளுக்கு நேர்ந்துடுத்தா?’’ "அவளுக்கென் ෆු - - - rర్తి بر ؟ அவளுக்கென்ன? அவளுக்கொன்றும் நோவில்லை. குத்துக்கல்லாட்டம் இருக்காள், தனக்கு நிகர் யாருமில் லேன்னு, கடபாறைக் கஷாயம். நேர்ந்தவர்கள் எல்லாம். தாம் தாம்.” 'சாமா, நீ திரும்பிப் போயிடு. இந்த மழை இப்போ தைக்கு விடறதாக இல்லை. அவள் தனியாக இருக்கப் புடாது.” 'போயிடறேன். எனக்கே தெரியும். ஆனால் மன்னி. உங்களை ஒண்ணு கேட்கத்தான் வந்தேன்." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/108&oldid=1403556" இலிருந்து மீள்விக்கப்பட்டது