பக்கம்:நேசம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா101


'அர்ச்சுனப் பல்குன க்ரீடி நரசவ்யசாசி.’’ கதவு படபட- யாராவது தட்டறாளா என்ன?” இல்லை, காற்று. -இல்லே யாரோ தட்டற மாதிரிதானிருக்கு இத்த மழையில் யார்? நிச்சயமாத் தட்டல்தான்.

  • யார்-யாரது?’’

நரன்தான்.' ஒரு உருவம் உள்ளே வந்து நாய்போல் உதறிக் கோண்டது; அவன்மேல் ஜலம் தெளித்தது.

  • சாதாவா? சாமா, சரமா!

கெளரியின் குரலில் அழுகையோடு சிரிப்பு கலந்து உடைத்தது. "மன்னி, நீங்கள் சரியா இருக்கேளா?” சாமாவுக்கு உடல் வெட வெடன உதறிற்று. 'சாமா தெப்பமா நெனைஞ்சிருக்கையே! உடனே அவர் அறைக்குப் போய்த் துணி மாத்திக்கோ. இந்த மழையில் எப்படிடா வந்தே?’’ உங்கள் நினைப்பெடுத்தது வந்துட்டேன். எப்படி வந்தேன்? எனக்கெப்படித் தெரியும்?" 'சாமா, அவளைத் தனியா விட்டுட்டு ஏண்டா வந்தே" "நீங்கள் தனியாயில்லையா? அதுக்காக வந்தேன். எப்படியிருக்கேள்?’’ "'என்னடா, எனக்குத் தனியாயிருந்து பழக்கங்தானே! அவளை விட்டுட்டு வரலாமா? சிறிசு ஸ்னானம் வேறு பண்ணல்லே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/107&oldid=1403555" இலிருந்து மீள்விக்கப்பட்டது