பக்கம்:நேசம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேனகை5


மேனகை 畿 நாளிலேயே இத்தனை சோர்வு. அப்படி கொலைப்பட்டினி பும் இல்லை. இன்னும் ஆறு நாட்கள். ஆறு நாட்களா? அம்மா, நீதான் மானம் போகாமல் காப்பாத்தனும்: இப்போ ஊரில் கோவிலில் நவராத்திரி அமர்க்களப்படும். கடைத்தெருவில் நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் அத்தனைபேரும், ஒன்பது நாளைக்கும் நீ, நான் என்று க்குப் போட்டி. கோவிலுக்குப் பிள்ளையில்லா ఫ్ఫ్ تينمن <ణ: சொத்துக்கள் வேறே ஏராளமா எழுதி வெச்சிருக்கு. உதவ பூஜையிலிருந்து அர்த்தஜாமம் வரை, ஒருவேளைக்குப் உத்துப் பன்னிரண்டு ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ஏற்றபடி அபிஷேகம், அலங்காரம் நைவேத் தியம், ஊதா, பச்சை, மஞ்சள், சிவப்பு, வெண் புதுப் பட்டுப்புடவைகளில் கர்ப்பக் கிரஹத்தின் இருளிலிருந்து அம்பாள் பிதுங்குவாள், அந்த மூக்குத் தியும் , மணிக்கிரீடமும், தாடகமும், திண்டு மானை யும், இதோ கண்ணெதிரே நிற்கிறான். அம்மா, மயிர்க்கச் செறிகிறது. சிவராஜ குருக்கள் என்றாலே சிரத்தைக்கு மறு பெயர் அம்பாளுக்கு அவர் கட்டிவிடும் கொசுவத்துக்கும் பெண்கள் வெட்கணும். ஒரு சமயம், அலங்காரம் முடிந்து குருக்குள் தல்ை திமிர்ந்த அந்தக் கணமே பக்கத்தில் உதவிக்கு நின்ற அவர் தம்பி, கையை மார்மேல் கட்டியவண்னம், கணிரென்ற சாரீரத்தில் அபிராமி அந்தாதியை அடி எடுத்தவுடன், அந்த திடுதிப்பு அப்படியே காலை வாரிவிட்டது இன்னும் மறக்கவில்லை. பாத்திரத்தின் விளிம்பிலிருந்த ஈ தேனுள் விழுந்து தத்தளிக்கும் தவிப்பு. அம்மா, உன்னை அந்த மாதிரி தரிசனம் கான, என்ன பட்டிகிையிருந்தாலும் தகும். இந்த உயிரே போய்விட்டால் தான் என்ன? போகிற வயசுதானே! இருந்து கண்டது. என்ன? ஒன்று தெரிகிறது. எ ல் லா ம் சமயத்தைப் பொறுத்தது. சமயந்தான் தெய்வம், சமயம்தான் தரிசனம். கண்மூடி கண் திறப்பதற்குள் அது நேர்ந்துவிடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/11&oldid=1403434" இலிருந்து மீள்விக்கப்பட்டது